மேலும்

செய்தியாளர்: இந்தியச் செய்தியாளர்

தலாய்லாமாவுடன் இணைந்து புதுடெல்லி மாநாட்டை துவக்கி வைத்தார் விக்னேஸ்வரன்

சிறிலங்காவில் இந்துக்கள் கடுமையான நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வருவதாக, புதுடெல்லியில் நடைபெறும், அனைத்துலக இந்து மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

ஒரு நாளில் 40 ஆயிரம் கப்பல்களைக் கண்காணிக்கும் பொறிமுறையை உருவாக்குகிறது இந்தியா

இந்தியப் பெருங்கடலில் கப்பல்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க இந்தியா உருவாக்கவுள்ள மிகப்பெரிய கண்காணிப்பு வலையமைப்பினால், நாளொன்றுக்கு, 40 ஆயிரம் கப்பல்களைக் கண்காணிக்க முடியும் என்று இந்தியக் கடற்படை தெரிவித்துள்ளது.

இலங்கை மீனவர்களை மட்டும் தண்டிப்பது என்ன நியாயம்? – இந்திய மனித உரிமை ஆர்வலர் கேள்வி

மரணதண்டனை விதிக்கப்பட்ட ஐந்து தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்து விட்டு, அதே வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை மீனவர்களைத் தண்டனை அனுபவிக்க வைப்பது என்ன நியாயம் என்று இந்திய மனித உரிமை ஆர்வலர் அவ்டாஸ் கௌசல் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடல் பாதுகாப்புக்கு பாரிய ரேடர் கண்காணிப்பு வலையமைப்பை உருவாக்குகிறது இந்தியா

இந்தியாவைச் சுற்றியுள்ள கடற்பிராந்தியத்தைக் கண்காணிக்கும் வகையில், பாரிய ரேடர் கண்காணிப்பு வலையமைப்பு ஒன்றை இந்தியப் பாதுகாப்பு அமைச்சு ஆரம்பிக்கவுள்ளது.

சீனக் கடற்படையின் நடமாட்டங்களை உன்னிப்பாக அவதானிக்கிறோம் – இந்திய கடற்படைத்தளபதி

சீன நீர்மூழ்கிகள் சிறிலங்கா துறைமுகங்களுக்கு வருவது உள்ளிட்ட இந்தியப் பெருங்கடலில், சீனக் கடற்படையின் செயற்பாடுகளை இந்தியக் கடற்படை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக, இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர்.கே.டோவன் தெரிவித்துள்ளார்.

மகிந்தவின் மன்னிப்புக்காக ஏங்கி நிற்கும் இந்தியா

கொழும்பு மேல் நீதிமன்றினால் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஐந்து தமிழ்நாட்டு மீனவர்கள் விவகாரத்தில், சட்டரீதியான  முயற்சிகளை விட, அரசியல் ரீதியான முடிவுகளை எடுப்பதற்கே, சிறிலங்காவுக்கு இந்தியா கடுமையான அழுத்தங்களைக் கொடுத்து வருவதாக தி ஹிந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இரண்டாவது தடவையாகவும் கொழும்பில் சீன நீர்மூழ்கி : ‘வழக்கத்துக்கு மாறானது’ – கேணல் ஹரிகரன்

சீன நீர்மூழ்கிகளின் தொடர்ச்சியான கொழும்பு வருகை புதுடெல்லிக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளதாக, ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொழும்புத் துறைமுகத்தில் மீண்டும் சீன நீர்மூழ்கி – கருத்து வெளியிட மறுத்த இந்திய அதிகாரி

இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி, சீனக் கடற்படையின் மற்றொரு நீர்மூழ்கியை கொழும்புத் துறைமுகத்துக்குள் சிறிலங்கா அனுமதித்திருப்பது இராஜதந்திர வட்டாரங்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.