மேலும்

செய்தியாளர்: இந்தியச் செய்தியாளர்

திருப்பதியில் சிறிலங்கா அதிபரை நிர்க்கதியாக நிற்க விட்ட சாரதி

திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் நேற்று வழிபாடு நடத்தச் சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, கார் சாரதி காணாமற்போனதால், 12 நிமிடங்களுக்கு மேலாக காரில் காத்திருக்க நேரிட்டது.

றோவின் முகவராகச் செயற்பட்டார் மாத்தயா – புதிய நூலில் வெளியாகியுள்ள தகவல்கள்

விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவராக இருந்த மாத்தயா எனப்படும் கோபாலசாமி மகேந்திரராஜா, இந்தியாவின் வெளியகப் புலனாய்வுப் பிரிவான றோவின் முகவராகச் செயற்பட்டிருந்தார் என்று, இந்திய ஊடகவியலாளர் நீனா கோபால் எழுதி, வெளியாகியுள்ள நூல் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் பாரிய எரிவாயு முனையத்தை அமைக்கும் முயற்சியில் இந்திய நிறுவனம்

சிறிலங்காவில் திரவ இயற்கை எரிவாயு முனையம் ஒன்றை நிறுவும் முயற்சிகளில் இந்தியாவின் பெட்ரோநெட் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக, அந்த நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் பிரபாத் சிங் தெரிவித்துள்ளார்.

சம்பூர், பலாலி, காங்கேசன்துறை திட்டங்கள் குறித்து இந்தியா- சிறிலங்கா அமைச்சர்கள் பேச்சு

பலாலி விமான நிலைய அபிவிருத்தி மற்றும் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாக, இந்தியாவும், சிறிலங்காவும் பேச்சுக்களை நடத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீபாவளிக்கு முன்னர் இந்தியா- சிறிலங்கா இடையே எட்கா உடன்பாடு

எதிர்வரும் ஒக்ரோபர் 30ஆம் நாள் கொண்டாடப்படவுள்ள தீபாவளிக்கு முன்னதாக, இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில், எட்கா எனப்படும், பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாடு கையெழுத்திடப்படவுள்ளது.

திருகோணமலை – மதவாச்சி இடையே புதிய தொடருந்து வழித்தடம் – இந்தியா ஆர்வம்

திருகோணமலையில் இருந்து மதவாச்சிக்கு புதிய தொடருந்து வழித்தடம் ஒன்றை உருவாக்குவதில், இந்தியா ஆர்வம் கொண்டிருப்பதாக, பிரிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் எட்கா உடன்பாடு – இந்திய, சிறிலங்கா அமைச்சர்கள் இணக்கம்

பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாட்டை (எட்கா) செய்து கொள்வது தொடர்பாக, விரைவாக பேச்சுக்களை நடத்தி, இந்த ஆண்டு இறுதிக்குள், முடிவை எட்டுவதற்கு, இந்தியாவும் சிறிலங்காவும் இணங்கியுள்ளன.

தேஜஸ் போர் விமானங்களை நட்பு நாடுகளுக்கு விற்கத் தயார்- இந்திய பாதுகாப்பு அமைச்சர்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானங்களை நட்புநாடுகளுக்கு விற்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக, இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் தெரிவித்துள்ளார்.

சந்திரபாபு நாயுடுவை சீனாவில் சந்தித்த சிறிலங்கா அமைச்சர் – கொழும்பு வருமாறு அழைப்பு

சுற்றுலா ஊக்குவிப்புத் தொடர்பாக இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன், சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக மற்றும் மூலோபாய கொள்கைகள் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம சீனாவில் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

துரையப்பா விளையாட்டரங்கத் திறப்பு விழா – காணொளி மூலம் இணைந்தார் இந்தியப் பிரதமர்

யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்ட துரையப்பா விளையாட்டரங்கு திறப்பு விழாவில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி காணொளித் தொழில்நுட்பத்தின் மூலம் கலந்து கொண்டார்.