மேலும்

செய்தியாளர்: அ.எழிலரசன்

சயனைட் குப்பிகள், செய்மதி தொலைபேசியுடன் தமிழ்நாட்டில் ஐவர் கைது – பிரிஐ தகவல்

தமிழ்நாடு, இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உச்சிப்புளியில், இரு இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் சயனைட் குப்பிகள், புவிநிலைகாட்டிகள்( ஜிபிஎஸ்) மற்றும் செய்மதி தொலைபேசியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா – இந்தியா இடையிலான மேம்பாலத்துக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி பச்சைக்கொடி

இராமேஸ்வரத்தையும் தலைமன்னாரையும் இணைக்கும் தலைவழிப்பாதையை அமைப்பதற்கு ஆசிய அபிவிருத்தி வழங்கி நிதி உதவி வழங்கத் தயாராக இருப்பதாக இந்திய அரசாங்கத்துக்குத் தெரிவித்துள்ளது.

இராமேஸ்வரம்- தலைமன்னார் இடையே தொடருந்துப் பாலம் அமைக்க இந்தியா திட்டம்

இராமேஸ்வரத்துக்கும் தலைமன்னாருக்கும் இடையில், தொடருந்துப் பாலம் ஒன்றை அமைக்கும் திட்டம் குறித்து இந்திய மத்திய அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக, இந்திய மத்திய தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், கப்பல்துறை அமைச்சர் பொன் இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

யாழ், திருமலை மீனவர்கள் ஐவர் இந்திய கடலோரக் காவல்படையால் கைது

இந்தியக் கடல் எல்லைக்குள் ஊடுருவியதாக கைது செய்யப்பட்டுள்ள ஐந்து யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை மீனவர்கள் இந்தியக் கடலோரக் காவல் படையினரால், காரைக்கால் கடலோரக் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கைத் தமிழர்களின் உரிமையைப் பெற்றுக் கொடுப்பது பாஜகவின் கடமை- முரளிதரராவ்

இந்தியாவிலும் சிறிலங்காவிலும் உள்ள தமிழர்களின் நலன்களில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறப்புக் கவனம் செலுத்தி வருவதாக, பாஜகவின் தேசிய செயலாளர் முரளிதரராவ் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரைப்படத்துக்கு இந்தியாவில் தடை – சிறிலங்காவுடனான நட்புவை பாதிக்குமாம்

நட்பு நாடான சிறிலங்காவுடனான உறவுகளைப் பாதிக்கும் என்ற காரணத்தைக் காட்டி, இறுதிக்கட்டப் போரில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் இசைப்பிரியாவின் வரலாற்றைச் சித்திரிக்கும் தமிழ்த் திரைப்படத்துக்கு இந்திய மத்திய தணிக்கைச் சபை அனுமதி மறுத்துள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றார் ஜெயலலிதா

தமிழ்நாடு முதலமைச்சராக ஜெயலலிதா, ஐந்தாவது தடவையாக இன்று பதவியேற்றார். அவருடன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 28 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

தமிழ்நாடு முதல்வராக நாளை பதவியேற்கிறார் ஜெயலலிதா

தமிழ்நாடு முதல்வராக ஜெயலலிதா நாளை பதவியேற்கவுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதையடுத்து, அவர் முதலமைச்சராகப் பதவியேற்பதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்றுகாலை தனது பதவியை விட்டு விலகினார்.

இந்தியா – சிறிலங்கா இடையே பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்க வலியுறுத்துகிறது ஐ.நா

இந்தியாவில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் நாடு திரும்புவதற்கு வசதியாக, இருநாடுகளுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையை மீள ஆரம்பிக்குமாறு ஐ.நா முகவர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து, முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா முழுமையாக விடுதலை செய்யப்பட்டுள்ளார்.  கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சற்று முன்னர், நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பை அறிவித்துள்ளார்.