மேலும்

பிம்ஸ்டெக் கடல்சார் பயிற்சியின் போது சிறிலங்கா கடற்படை அதிகாரி மரணம்

இந்தியாவில் நடைபெற்ற பிம்ஸ்டெக் (BIMSTEC) கடல்சார் பாதுகாப்புப் பயிற்சியில் பங்கேற்கச் சென்றிருந்த சிறிலங்கா கடற்படை அதிகாரி ஒருவர், திடீர் உடல்நலக்குறைவினால் உயிரிழந்துள்ளார்.

அந்தமான் – நிகோபார் தீவுகளில், ஒக்ரோபர் 30ஆம் நாள் தொடக்கம், நொவம்பர் 3ஆம் நாள் வரை,பிம்ஸ்டெக் கடல்சார் பாதுகாப்புப் பயிற்சி இடம்பெற்றது.

இந்தக் கூட்டுப் பயிற்சியில்  பங்கேற்கச் சென்றிருந்த சிறிலங்கா கடற்படைக் கப்பலான ‘எஸ்.எல்.என்.எஸ் கஜபாகு’வில் பணியாற்றிய கொமாண்டர் எஸ்.ஏ.எஸ்.எம். சமரகோன், ஸ்ரீ விஜயபுரத்தில் நவம்பர் 2ஆம் நாள் காலமானார்.

அவரது உடல், இந்திய விமானப்படைக்குச் சொந்தமான சி-130  விமானம் மூலம் நேற்று கொழும்புக்குக் கொண்டு வரப்பட்டது.

அதிகாரியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள இந்திய தூதரகம், அவரது உடல் சிறிலங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *