மேலும்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் இன்று விசாரணை

‘ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்தின் (Prevention of Organised Crimes Bill) அரசியலமைப்புச் செல்லுபடித்தன்மையைச் சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட 26 மனுக்களை உயர்நீதிமன்றில் மூன்று நீதியரசர்கள் அடங்கிய அமர்வு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளது.

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்தச் சட்ட வரைவின் பல்வேறு பிரிவுகளை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுக்களை விசாரிப்பதற்காக, பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சுரசேன மூன்று பேர் கொண்ட அமர்வை நியமித்துள்ளார்.

பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சுரசேன தலைமையிலான இந்த அமர்வில், நீதியரசர்கள் அச்சல வெங்கப்புலி மற்றும் சம்பத் அபயகோன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *