மேலும்

சிறிலங்கா நீதியமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியதாக குற்றம்சாட்டி, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக, ஐக்கிய மக்கள் சக்தி  நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைக்கவுள்ளது.

அண்மையில் நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலில் உயிரிழந்த சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகளின் பாதுகாப்பு தொடர்பான தனது பொறுப்பை நிறைவேற்றத் தவறிய நீதி அமைச்சருக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவர ஐக்கிய மக்கள் சக்தி நேற்று  தீர்மானித்தது.

இதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று நம்பிக்கையில்லா பிரேரணையைில்  கையெழுத்திட்டுள்ளனர்.

அதேவேளை சர்வஜன பலய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர உள்ளிட்ட ஏனைய எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் சிலரும் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *