அனுர தலைமையில் போர் வெற்றி நாள் நிகழ்வு – இராணுவ அணிவகுப்பு இல்லை
கொழும்பில் நடைபெறவுள்ள சிறிலங்காவின் போர் வெற்றி நாள் நிகழ்வில், இராணுவ அணிவகுப்பு இடம்பெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரணவிரு சேவா அதிகாரசபையின் தலைவர் பிரிகேடியர் எஸ்.பி.கொஹன இதனைத் தெரிவித்துள்ளார்.
மூன்று பத்தாண்டுகளாக இடம்பெற்ற போரை முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட 17வது போர் வெற்றி நாள் நிகழ்வு, நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு, இடம்பெறவுள்ளது.
சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் இந்த நிகழ்வு இடம்பெறும்.
இந்த ஆண்டு நிகழ்வில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, நினைவு நிகழ்வில் இராணுவ அணிவகுப்பு இருக்காது.
இந்த ஆண்டு நிகழ்வில், முப்படையினர், காவல்துறையினர், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினர், தேசிய கடெட் படையணியினர், மரணமான படையினரின் குடும்ப உறுப்பினர்கள், வெளிநாட்டு பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் என, 2,700 பேர் வரை பங்கேற்பார்கள்.
இம்முறை போரில் பங்கெடுத்த தமிழ், முஸ்லிம் படையினர் மற்று அவர்களின் குடும்பத்தினர் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர் என்றும் பிரிகேடியர் கொஹன தெரிவித்துள்ளார்.
