அசோக ரன்வல கலாநிதி பட்டச் சான்றிதழை இதுவரை சமர்ப்பிக்கவில்லை
முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல கலாநிதிப் பட்டச் சான்றிதழை இதுவரை சமர்ப்பிக்கவில்லை என்று சுகாதார அமைச்சரும் அரசாங்க ஊடகப் பேச்சாளருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர்,
அசோக ரன்வல தனது கலாநிதி பட்டத்தை மோசடி செய்திருந்தால், தேசிய மக்கள் சக்தி அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்.
எனினும், அவருக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை கட்சி இன்னும் முடிவு செய்யவில்லை.
தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்காதவர்கள் இந்த விடயத்தைப் பற்றிப் பேசினர்.
எனினும், நடவடிக்கை எடுக்கும்போது தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தவர்களின் கருத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
விரைவில் கலாநிதி பட்ட சான்றிதழைச் சமர்ப்பிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரன்வல கட்சிக்கு உறுதியளித்திருந்தார். ஆனால் இதுவரை அதைச் செய்யவில்லை.
ரன்வல விரைவில் சான்றிதழைச் சமர்ப்பிப்பார் என்று நான் ஒரு முறை அமைச்சரவை மாநாட்டில் கூறியிருந்தேன்.
அவர் கட்சியிடம் கூறியதன் அடிப்படையிலேயே நானும் அவ்வாறு கூறினேன். இருப்பினும், அவர் இதுவரை அதைச் சமர்ப்பிக்கவில்லை என்றும் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.
