மேலும்

சீனக் குழுவினரை வரவேற்க வராத ரில்வின் சில்வா

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்துலக பிரிவின் குழுவொன்று சிறிலங்காவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை பெலவத்தையில் உள்ள ஜேவிபி தலைமையகத்துக்கு இந்தக் குழுவினர் சென்ற போது,  அவர்களை வரவேற்றவர்களில் கட்சியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா இருக்கவில்லை

அவருக்குப் பதிலாக,  பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல சீனப் பிரதிநிதிகளை வரவேற்றிருந்தார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்துலக பிரிவின் தகவல் மையத்தின் துணை பணிப்பாளர் நாயகம்  காங் ஷுவாய்,  பீஜிங் நகராட்சி குழு கட்சிப் பள்ளியின் உதவிப் பேராசிரியர் ஜியாங் வென், மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தகவல் ஆராய்ச்சி மையத்தின் பணிப்பாளர் ஜாங் குய்ஃபெங் ஆகியோர் சீனக் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

அவர்கள் முதலில் மஹரகமவில் உள்ள ஜேவிபியின் கொழும்பு மாவட்ட அலுவலகத்திற்குச் சென்று இயற்கை பேரிடர் நிலைமை மற்றும் தற்போதைய நிவாரண நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடியிருந்தனர்.

தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களான தேவானந்த சுரவீர மற்றும் லக்மாலி ஹேமச்சந்திர, மஹரகம நகர முதல்வர் சமன் சமரக்கோன், துணை முதல்வர் ரஞ்சனி நாவுட்டுன்னா மற்றும் ஹோமகம பிரதேச சபைத் தலைவர் கசுன் ரத்நாயக்க ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *