பேரிடர் நிலை குறித்து மகாநாயக்கர்களுக்கு விளக்கமளித்தார் அனுர
சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க நேற்று மல்வத்த மகா விஹாரைக்குச் சென்று மல்வத்த பீடத்தின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே சிறி சுமங்கல தேரரைச் சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
இதன்போது, தற்போதைய பேரிடர் சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் அரசாங்கத்தின் தொடர்ச்சியான திட்டங்கள் குறித்து மகாநாயக்க தேரருக்கு அவர் விளக்கிக் கூறியுள்ளார்.
நிவாரண நடவடிக்கைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் அவர்கள் இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடியுள்ளனர்.
அதன் பின்னர், அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர், வரகாகொட சிறி ஞானரதன தேரரைச் சந்தித்து, தற்போதைய பேரிடர் நிலைமை மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்தும் விளக்கமளித்துள்ளார்.
அதையடுத்து, அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர், நாரம்பனாவே ஆனந்த அனுநாயக்க தேரரையும் சிறிலங்கா அதிபர் சந்தித்துள்ளார்.
