அஜித் டோவலுடன் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் பேச்சு
சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தவுக்கும், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுக்கும் இடையில் இருதரப்பு பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன.
புதுடெல்லியில் நேற்று நடைபெற்ற கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் 7வது தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டக் கூட்டத்தின் ஒரு பகுதியாக இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இதன் போது, இரு தரப்பினரும் பரஸ்பர நலன் சார்ந்த பாதுகாப்பு தொடர்பான பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய ஆக்கபூர்வமான உரையாடலில் ஈடுபட்டனர்.
கொழும்புப் பாதுகாப்பு மாநாட்டின் ஐந்து தூண்களான கடல்சார் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு, பயங்கரவாதம் மற்றும் தீவிரமயமாக்கலை எதிர்த்தல், கடத்தல் மற்றும் நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்த்துப் போராடுதல், சைபர் பாதுகாப்பு, மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் ஆகியவற்றுடன் இணைந்த பகுதிகளில் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது குறித்து இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.
