சிறிலங்கா- சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு
சவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான்,சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
ரியாத்தில் நேற்று இந்த பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன.
சந்திப்பின் போது, இரு அமைச்சர்களும் தங்கள் நாடுகளுக்கு இடையிலான உறவுகள் குறித்து கலந்துரையாடியதாகவும், பரஸ்பர அக்கறை கொண்ட பிராந்திய மற்றும் அனைத்துலக பிரச்சினைகள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாகவும் சவுதி ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
சந்திப்பின் முடிவில், சவுதி அரேபியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 50 ஆண்டுகளைக் குறிக்கும் நினைவு அஞ்சல் தலையை இளவரசர் பைசல், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருக்கு வழங்கினார்.
