பற்றாக்குறையை 5 வீத இலக்காக கொண்ட வரவுசெலவுத் திட்டம்
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.1 சதவீத வரவுசெலவுத் திட்ட பற்றாக்குறையை இலக்காகக் கொண்டு, 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க சமர்ப்பித்துள்ளார்.
அவர் நாடாளுமன்றத்தில் நேற்று சமர்ப்பித்த வரவுசெலவுத் திட்டத்தின்படி, 2025 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5 சதவீதமாக இருந்தது.
2025 ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட வருமானம் 5,075 பில்லியன் ரூபாவுடன் (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15.9 சதவீதம்) ஒப்பிடும்போது, அடுத்த ஆண்டு சிறிலங்கா 5,270 பில்லியன் ரூபாவை (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15.3 சதவீதம்) மொத்த வருமான இலக்காகக் கொண்டுள்ளது.
மீண்டெழும் செலவு 5,688 பில்லியன் ரூபாவாக இருக்கும், இது இந்த ஆண்டின் திருத்தப்பட்ட மீண்டெழும் செலவான 5,530 பில்லியன் ரூபாவை விட அதிகமாகும்.
2025 இல் 1,033 பில்லியன் ரூபாவாக இருந்த பொது முதலீடு, 1,380 பில்லியன் ரூபாவாக அதிகரிக்கும்.
வருமானபற்றாக்குறை 418 பில்லியன் ரூபாவாக இருக்கும், இது இந்த ஆண்டு திருத்தப்பட்ட பற்றாக்குறையான 455 பில்லியன் ரூபாவை விட குறைவாக இருக்கும்.
வரவுசெலவுத் திட்ட பற்றாக்குறை 1,757 பில்லியன் ரூபாவாக (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.1 சதவீதம்) இருக்கும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது,
இது கடந்த ஆண்டின் 1,448 பில்லியன் ரூபா என்ற அளவில் இருந்து (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5 சதவீதம்) அதிகரித்துள்ளது.

