பலாலி உள்ளிட்ட விமான நிலையங்களின் அபிவிருத்திக்கு 1 பில்லியன் ரூபா
சிகிரியா மற்றும் திருகோணமலை உள்நாட்டு விமான நிலையங்களை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சிகிரியா மற்றும் திருகோணமலை உள்நாட்டு விமான நிலையங்களின் அபிவிருத்திக்காகவும், யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தின் செயல்பாடுகளை விரிவுபடுத்தவும் ஒரு பில்லியன் ரூபா ஒதுக்க முன்மொழியப்பட்டுள்ளது.
மேலும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை மேலதிக ஏற்பாடுகளை வழங்கும்.
எந்தவொரு எஞ்சிய தொகையும் விமான நிலையங்கள் அதிகார சபையிடம் இருந்து கிடைக்கும்
ஹிங்குரக்கொட விமான நிலைய அபிவிருத்திப் பணி 2026 ஆம் ஆண்டளவில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கு உள்நாட்டு விமானங்களை மேம்படுத்துவது அவசியம் என்றும் சிறிலங்கா அதிபர் தெரிவித்துள்ளார்.
