வரவுசெலவுத் திட்ட உரையில் ஆழ்ந்த உறக்கத்தில் அர்ச்சுனா
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று அதிபர் அனுரகுமார திசாநாயக்க வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றிய போது, யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.
நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் அதிபர் அனுரகுமார திசாநாயக்க தனது 2026ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்ட உரையை நிகழ்த்த ஆரம்பித்தார்.
அவரது உரை மாலை 6 மணிவரை சுமார் நான்கரை மணித்தியாலங்கள் வரை நீடித்தது.
இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததை காட்டும் படங்களும், காணொளிகளும் ஊடகங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

