சிவில் பாதுகாப்புத் திணைக்களம் கைமாறியது
அண்மைய அமைச்சரவை மாற்றங்களை அடுத்து, அமைச்சுக்களின் கீழ் வரும் நிறுவனங்கள் சிலவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பான சிறப்பு அரசிதழ் அறிவிப்பை சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க வெளியிட்டுள்ளார்.
அதற்கமைய,பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்து வந்த சிவில் பாதுகாப்பு திணைக்களம், அதிலிருந்து விடுவிக்கப்பட்டு, பொது பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதேவேளை, தேசிய நீரியல் சபை மற்றும் சிறிலங்கா தேசிய நீரியல் பணியகம் ஆகியவை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
சிறிலங்கா சர்வதேச நடுவர் மையம் நிறுவனம் மற்றும் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பணியகம் ஆகியன, பொது பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.