மேலும்

ஊடகவியலாளர்கள் சிவராம், ரஜீவர்மன் நினைவு நிகழ்வில் நீதி கோரி போராட்டம்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான தராகி சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வும், இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவு தூபி முன்பாக நடைபெற்ற நிகழ்வில் யாழ்ப்பாணம் மற்றும் தென்பகுதி ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டு, சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் உருவப்படங்களுக்கு சுடரேற்றி, மலர் மாலை அணிவித்து மலர் தூவி வணக்கம் செலுத்தினர்.

அதனை தொடர்ந்து படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அஞ்சலி நிகழ்வு ஆரம்பிக்கப்பட முன்னரே, நினைவு தூபி அமைந்துள்ள பகுதியில் பெருமளவான சிறிலங்கா காவல்துறையினர் சீருடையுடனும், சாதாரண உடையிலும் குவிக்கப்பட்டிருந்தனர்.

பெருமளவான புலனாய்வாளர்கள் அங்கு அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதுடன், ஒளிப்படங்கள் மற்றும் காணொளிகளை எடுத்தனர்.

ஊடகவியலாளர் சிவராம் கடந்த 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி கொழும்பில் கடத்தப்பட்ட பின்னர், நாடாளுமன்றத்துக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டார்.

ஊடகவியலாளர் செல்வராஜா ரஜீவர்மன், 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் திகதி காலை 10 மணியளவில் யாழ். ஸ்ரான்லி வீதியில் வைத்து இனம் தெரியாத நபர்களால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்.

அதேவேளை படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான தராகி சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வு, வடமராட்சி ஊடக இல்லத்திலும் இன்று இடம்பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *