பொதுப் பாதுகாப்பு அமைச்சர் பதவி விலக வேண்டும்- தயாசிறி ஜயசேகர
சிறிலங்காவின் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பதவி விலக வேண்டும் என, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தியுள்ளார்.
இன்று நடத்திய ஊடகச் சந்திப்பு ஒன்றில் அவர்,
அண்மையில் நடந்த கொலைகள், பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, தனது கடமையான சட்டம் ஒழுங்கை பராமரிக்கத் தவறிவிட்டார் என்பதற்கான தெளிவான சான்றாகும்.
சட்டம் ஒழுங்குக்குப் பொறுப்பான அமைச்சராக அவர் தனது பொறுப்புகளை நிறைவேற்றவில்லை.
எந்தவொரு அமைச்சரும் பதவியேற்கும் போது,தனக்கு ஒதுக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்றுவதாக உறுதியளிக்கிறார்.
அவரது அமைச்சின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களையும் திறம்பட நிர்வகிப்பதற்கு அவரே பொறுப்பு.
தற்போதைய சட்டம் ஒழுங்கு அமைச்சர் இந்தக் கடமைகளில் இருந்து தவறிவிட்டார். அதன்படி, அவர் பதவி விலக வேண்டும்.
அதேவேளை, கடந்த சில வாரங்களாக 31 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன, 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அண்மைய கொலைகளுக்கு பதில் காவல்துறை மா அதிபர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பொறுப்புக் கூற வேண்டும். என்றும் தெரிவித்துள்ளார்.