மேலும்

விலைகள் குறைப்பு, ஊதிய அதிகரிப்பு – அள்ளிவீசப்பட்டுள்ள பொருளாதார சலுகைகள்

Ravi-Karunanayakeசிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட புதிய அரசாங்கத்தின்  2015ம் ஆண்டுக்கான இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில், பெருமளவு பொருளாதாரச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இன்று பிற்பகல் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவுசெலவுத் திட்டத்தில், அறிவிக்கப்பட்டுள்ள சில பொருளாதார சலுகைகளின் விபரங்கள் வருமாறு-

  • முன்னைய அரசாங்கத்தினால் 2015ம் ஆண்டு சிறிலங்கா அதிபரின் செலவுகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி 9,593 கோடி ரூபாவில் இருந்து, 290 கோடி ரூபாவாக குறைப்பு.
  • அரச பணியாளர்களின் ஊதியம் பெப்ரவரி மாதம் 5,000 ரூபாவால் அதிகரிப்பு, ஜூன் மாதம் முதல் மேலும் 5,000 ரூபா அதிகரிப்பு.
  • தனியார்துறை பணியாளர்களின் மாத ஊதியத்தை 2,500 ரூபாவால் அதிகரிக்குமாறு கோரிக்கை.
  • ஓய்வூதியக் கொடுப்பனவு 1,000 ரூபாவால் அதிகரிப்பு.
  • சமுர்த்திக் கொடுப்பனவு 100 சதவீதம் முதல் 200 சதவீதம் வரை அதிகரிப்பு.
  • பிறக்கும் குழந்தைகள் மற்றும் அவர்களில் தாய்மாருக்கு 2 ஆண்டுகள் வரை கொடுப்பனவு.
  • வர்த்தக வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனில் 50 சதவீதம் தள்ளுபடி.
  • சிறிய ரக உழவு இயந்திரங்கள் குறைந்த விலையில் பெற்றுக் கொடுக்கப்படும்.
  • உரமானியம் தொடர்ந்து வழங்கப்படும்.
  • கொழும்பு நகரில் மீண்டும் குடியேறும் மக்களுக்கு நிவாரணம்.
  • சிறுநீரக நோயாளிகளின் கொடுப்பனவுக்காக 2,000 மில்லியன்.
  • சுகாதாரத்துறைக்கான செலவு 3 சதவீதத்தால் அதிகரிப்பு.
  • அரச மருத்துவமனைகளில் வெளிநோயாளர் பிரிவு 24 மணிநேரமும் திறந்திருக்கும்.
  • மண்ணெண்ணெய் விலை லீற்றருக்கு 6 ரூபாவால் குறைப்பு.
  • 13 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு.
  • சீனியின் விலை 10 ரூபாவினால் குறைப்பு.
  • 400கிராம் பால்மாவின் விலை 61 ரூபாவால் குறைப்பு.
  • கோதுமை மாவின் விலை ரூ.12.50வினால்   குறைப்பு.
  • நெத்தலி கருவாட்டுக்கான வரி 15 ரூபாவால் குறைப்பு.
  • பாசிப்பயறு விலை கிலோவுக்கு 30 ரூபாவால் குறைப்பு.
  • கொள்கலனில் அடைக்கப்பட்ட மீன் விலை 60 ரூபாவால் குறைப்பு.
  • கொத்தமல்லிக்கான வரி 30 ரூபாவால் குறைப்பு.
  • உழுந்து  விலை 60 ரூபாவால் குறைப்பு.
  • சமையல் எரிவாயுவின் விலை 300ரூபாவால் குறைப்பு.
  • மாசி கருவாடு விலை 200ரூபாவால் குறைப்பு.
  • அரச வங்கிகளில் 2 இலட்சம் ரூபாவுக்கு குறைவாக பெறப்பட்ட நகை அடகுக்கடனுக்கான வட்டி தள்ளுபடி.
  • சீமெந்து மூடையொன்றின் விலை 90 ரூபாவால் குறைப்பு.
  • 5,000 ரூபாவாக இருந்த திருமண மற்றும் பதிவுக்கட்டணம் 1,000 ரூபாவாக குறைப்பு.
  • அலைபேசிகளுக்கான மீள்நிரப்பு அட்டைக்கான வரி குறைப்பு.
  • மகாபொல புலமைப்பரிசில் 5,000 ரூபாவால் அதிகரிப்பு.
  • அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கு 200 ரூபா கொடுப்பனவு.
  • மூத்த குடிமக்களுக்கான போக்குவரத்துக் கட்டணம் 50 சதவீதத்தால் குறைப்பு.
  • மீனவர்களுக்கு ஆயுட் காப்புறுதி.
  • அனைவரும் 250 ரூபாவுடன் வங்கிக்கணக்கு ஆரம்பிக்க நடவடிக்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *