அமெரிக்க இடைக்காலத் தேர்தல்களிலிருந்து சிறிலங்கா அரசாங்கம் பாடம் கற்க வேண்டும்
அமெரிக்க இடைக்காலத் தேர்தல்களிலிருந்து சிறிலங்கா அரசாங்கம் ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர்,
“அமெரிக்க மக்கள் தாங்கள் அனுபவித்த துன்பங்கள் காரணமாகவே ட்ரம்ப் நிர்வாகத்தை நிராகரித்தனர்.
சிறிலங்கா மக்களும் தற்போது துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இந்தச் சூழலை சிறிலங்கா அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மாகாண சபைத் தேர்தல்களை நடத்திப் பாருங்கள், அப்போது மக்களின் எதிர்வினை என்னவென்று உங்களுக்குத் தெரியும்” என்றும் குறிப்பிட்டார்.
