திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்று இரண்டாவது நாளாக போராட்டம்
தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள, திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்று இரண்டாவது நாளாக போராட்டம் இடம்பெற்று வருகிறது.
தையிட்டியில் பொதுமக்களின் காணிகளை ஆக்கிரமித்து, சிறிலங்கா படையினரால் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஒவ்வொரு பௌர்ணமி தோறும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
நேற்று பிற்பகல் 4 மணிக்கு ஆரம்பமான போராட்டம் மாலை 6 மணிக்கு இடைநிறுத்தப்பட்டது. இன்று காலை 6 மணியிலிருந்து தொடர்ந்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மாலை 6 மணி வரை குறித்த போராட்டம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டத்தில் பொதுமக்கள் மற்றும் காணி உரிமையாளர்களுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரமுகர்கள் பங்கேற்றுள்ளனர்.

