வேட்புமனுக்கள் தொடர்பான 60 மனுக்கள் தள்ளுபடி
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ள உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட சுமார் 60 ரிட் மனுக்களை சிறிலங்கா மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் சார்பில் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இவற்றை இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள், அவற்றை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டுள்ளனர்.
