மேலும்

Archives

சீனாவின் உயர்மட்ட அரசியல் ஆலோசகருடன் சிறிலங்கா பிரதமர் சந்திப்பு

பெண்கள் தொடர்பான உலகத் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க பீஜிங் சென்றுள்ள சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரியவை, சீனாவின் உயர்மட்ட அரசியல் ஆலோசகர் வாங் ஹுனிங், சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

பிம்ஸ்டெக்குடன் நெருக்கமாகப் பணியாற்ற சிறிலங்கா  உறுதி

பிராந்திய செழிப்பு மற்றும் மீள்தன்மைக்காக அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளின் திறனைப் பயன்படுத்திக் கொள்வதற்காக, பிம்ஸ்டெக்குடன் நெருக்கமாகப் பணியாற்ற சிறிலங்கா  உறுதிபூண்டுள்ளதாக  சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

சீனப் பிரதமரைச் சந்தித்தார் சிறிலங்கா பிரதமர்

சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரிய, சீனப் பிரதமர் லி கியாங்குடன் பீஜிங்கில் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.

சீனாவைச் சென்றடைந்தார் சிறிலங்கா பிரதமர்

சிறிலங்கா பிரதமர்  ஹரிணி அமரசூரிய சீனாவுக்கான பயணத்தை மேற்கொண்டு நேற்று பீஜிங் அனைத்துலக விமான நிலையத்திற்கு சென்றடைந்துள்ளார்.

முதலீடுகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொடுத்தார் சிறிலங்கா அதிபர்

தற்போதைய அரசாங்கத்தின் கீழ், நாட்டிற்குள் வரும் முதலீட்டாளர்கள் மற்றும் முதலீடுகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தீய சக்திகளால் சேதமாக்கப்பட்ட அணையா விளக்கு மீண்டெழுந்தது

தீய சக்திகளால் சேதமாக்கப்பட்ட அணையா விளக்கு நினைவுச் சின்னம் மீண்டும்  அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியத் தூதுவருடன் சுமந்திரன் சந்திப்பு – அரசியல் நிலவரங்கள் குறித்து ஆலோசனை

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின்பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

கொழும்பு துறைமுகத்தில் அமெரிக்க போர்க்கப்பல்

அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் பிட்ஸ்ஜெரால்ட் ( USS FITZGERALD (DDG 62) கொழும்புத் துறைமுகத்திற்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.

மகிந்தவின் பாதுகாப்பு அதிகாரிக்கு விளக்கமறியல் – மலைக்க வைக்கும் சொத்துகள் விபரம்

சிறிலங்காவின் முன்னாள் அதிபர்  மகிந்த ராஜபக்சவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி லெப்டினன்ட் கேணல் நெவில் வன்னியாராச்சியை, எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதிவான் அசங்க போதரகம   உத்தரவிட்டுள்ளார்.

சுயாதீன வழக்குத்தொடுநர் பணியகத்தை உருவாக்கும் பணிகள் ஆரம்பம்

சுயாதீன வழக்குத்தொடுநர் பணியகத்தை உருவாக்குவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.