நிச்சயமற்ற நிலையில் மகிந்த – அனுராதபுர கூட்டம் திடீரென ஒத்திவைப்பு
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச மேடையேறவிருந்த அனுராதபுர கூட்டம் திடீரெனப் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச மேடையேறவிருந்த அனுராதபுர கூட்டம் திடீரெனப் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து வெளியேறுவதாக, சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஜாதிக ஹெல உறுமய அறிவித்துள்ளது. இன்று பிற்பகல் கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில், அமைச்சர் சம்பிக்க ரணவக்க இதனை அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
மகிந்த ராஜபக்சவைப் போட்டியிட அனுமதிப்பதன் மூலம், தன்னை அதிகாரத்துக்கு கொண்டு வந்த சிறுபான்மையின மக்களுக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன துரோகம் செய்யக் கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட மகிந்த ராஜபக்சவுக்கு இடமளிப்பது குறித்து கட்சியில் இன்னமும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச குருநாகல மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக, முன்னாள் அமைச்சர் ரி.பி.எக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான தமது நிலைப்பாட்டை, மகிந்த ராஜபக்ச தரப்பு இன்று பிற்பகல் 4 மணியளவில் கொழும்பில் நடைபெறவுள்ள செய்தியாளர் சந்திப்பில் வெளியிடப்படும் என்று, மகிந்த ராஜபக்சவின் பேச்சாளர் ரொகான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச போட்டியிடுவது குறித்து கருத்து வெளியிட ஐ.நா மறுத்துள்ளது.
இந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிக்கமாட்டோம் என்று, சிங்கள கடும்போக்குவாத அமைப்பான பொது பல சேனா அறிவித்துள்ளது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடுவதற்கு, மகிந்த ராஜபக்சவுக்கு இடமளிக்க முடியாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சியில் போட்டியிடுவதென்று இன்னும் 48 மணிநேரத்தில் அறிவிக்கவுள்ளதாக, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.