மேலும்

Tag Archives: தினேஸ் குணவர்த்தன

புதுடெல்லி பயணத்துக்கான அழைப்பை நிராகரித்தது கூட்டு எதிரணி

புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள சிறிலங்கா நாடாளுமன்றக் குழுவில் இடம்பெறுவதற்கு, விடுக்கப்பட்ட அழைப்பை கூட்டு எதிரணியின் தலைவர் தினேஸ் குணவர்த்தன நிராகரித்துள்ளார்.

மகிந்த தலைமையில் இன்று இரண்டு முக்கிய கூட்டங்கள்

கூட்டு எதிரணி மற்றும் 16 பேர் அணியின் இரண்டு முக்கிய கூட்டங்கள், மகிந்த ராஜபக்ச தலைமையில் இன்று கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிச்சத்துக்கு வந்தது கூட்டு எதிரணியின் பிளவு

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று பிரதி சபாநாயகர் தெரிவின் போது, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் முன்னிறுத்தப்பட்ட சுதர்சினி பெர்னான்டோ புள்ளேக்கு, மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட கூட்டு எதிரணியின் ஒரு பகுதி உறுப்பினர்கள் ஆதரவு அளிக்கவில்லை.

16 பேர் அணி மகிந்தவின் பக்கம் சாய்கிறது

கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகிய, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை நாளை மறுநாள் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர்.

ரணிலை நீக்குவது குறித்து சட்ட ஆலோசனை – கூட்டு எதிரணியிடம் சிறிலங்கா அதிபர் வாக்குறுதி

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கம் செய்வது குறித்து, தாம் சட்டமா அதிபர் மற்றும் சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை கோருவதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கூட்டு எதிரணியினரிடம் உறுதியளித்துள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாட்டுக்கு நாடாளுமன்றம் அங்கீகாரம் – கூட்டு எதிரணி இரட்டைவேடம்

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் குத்தகை உரிமையை சீன- சிறிலங்கா கூட்டு முயற்சி நிறுவனங்களுக்கு மாற்றும் வகையில் வெளியிடப்பட்ட இரண்டு அரசிதழ் அறிவிப்புகளுக்கு சிறிலங்கா நாடாளுமன்றம் நேற்று அங்கீகாரம் அளித்துள்ளது.

அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு

உள்ளூராட்சி, மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கு எதிராக கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை சபாநாயகரிடம் கையளித்துள்ளனர்.

காணாமல் ஆக்கப்படுவதில் இருந்து பாதுகாக்கும் அனைத்துலக பிரகடனம் – பின்வாங்கியது அரசு

பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுவதில் இருந்து அனைவரையும் பாதுகாக்கும் அனைத்துலக பிரகடனம் தொடர்பான விவாதம் வரும் 21ஆம் நாள் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படாது என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இரண்டு வாரங்களில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பறிபோகும் – எச்சரிக்கிறது மகிந்த அணி

சிறிலங்கா அரசாங்கம் இன்னும் இரண்டு வாரங்களில் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழக்கும் என்று கூட்டு எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

3000 மில்லியன் ரூபா மோசடி – மகிந்தவுடன் இணைந்து விசாரணைக்கு வந்த தினேஸ்

முன்னைய ஆட்சிக்காலத்தில் குடிநீர் விநியோகத் திட்டத்தில் 3000 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பாக, அப்போதைய நீர்வழங்கல், வடிகால் அமைப்பு அமைச்சரும்,  கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான தினேஸ் குணவர்த்தனவிடம், நேற்று இரண்டரை மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.