அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி மங்கள சமரவீரவைச் சந்தித்துப் பேச்சு
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கும் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் இருதரப்புப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கும் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் இருதரப்புப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி பயணம் செய்த போயிங் 757 விமானம் சற்று முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியுடன், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்தின் மூத்த அதிகாரிகளும் கொழும்பு வரவுள்ளனர்.
இரண்டு நாள் பயணமாக இன்று காலை 7.45 மணியளவிவில் சிறிலங்காவை வந்தடையவுள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, நாளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்டோரை சந்தித்துப் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி சிறிலங்காவுக்கான இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்டு இன்றுகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவுள்ளார். அவர் பயணம் செய்யும் சிறப்பு விமானம் நேற்று அதிகாலையில் வொசிங்டனில் இருந்து புறப்பட்டது.
அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, சிறிலங்காவுக்கான அதிகாரபூர்வ பயணமாக இன்று காலை அமெரிக்காவில் இருந்து புறப்பட்டு, நாளை அதிகாலையில் கொழும்பை வந்தடைவார் என்று ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது.
தமது நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் பணியாற்றுவதன் மூலம் ஜோன் கெரியை தம் பக்கம் கவர்ந்திழுக்க முடியும் என ராஜபக்சக்கள் கருதிய போதிலும், கெரி தனது நிகழ்ச்சி நிரலுக்கேற்ப ராஜபக்சக்களை செயற்பட வைக்க முயன்றார். அதன் விளைவு என்ன?
அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியின் பாதுகாப்புக்காக, அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் 200 பேர், 40 மோப்ப நாய்கள் சகிதம், சிறிலங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் குறித்த அமெரிக்காவின் நீண்டகால கரிசனைகள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைகளை, சிறிலங்காவிடம் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி வலியுறுத்துவார் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி வரும் சனிக்கிழமை, மே 02ஆம் நாள் சிறிலங்காவுக்கு அரசுமுறைப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.இதனை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் நேற்று உறுதிப்படுத்தியுள்ளது.