மேலும்

Tag Archives: சபாநாயகர்

சிஐஏ, எம்16 புலனாய்வு அமைப்புகளுடன் போரிட்டோம் – உதய கம்மன்பில

சிறிலங்கா அரசியல் நெருக்கடியில், அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பு (சிஐஏ) மற்றும் பிரித்தானியாவின் எம்-16 புலனாய்வு அமைப்புகளின் தலையீடுகள் இருந்ததாக, மகிந்த ராஜபக்ச அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றம்சாட்டியுள்ளார்.

சபநாயகர் மீது நாடாளுமன்றத்துக்குள் அமிலம் வீச சதித்திட்டம்  

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கடந்த 16ஆம் நாள் நடந்த குழப்பங்களின் போது, சபாநாயகர் கரு ஜெயசூரிய மீது அமிலம் (அசிட்) வீசுவதற்கு சதித்திட்டம் தீட்டப்படமை தொடர்பாக சிறிலங்கா காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருவதாக, நாடாளுமன்ற உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மகிந்த அணிக்கு சபாநாயகர் சவால்

சபாநாயகர் பதவிக்குத் தான் பொருத்தமில்லை என்றால், தனக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுமாறு, மகிந்த அணியினருக்குச் சவால் விடுத்துள்ளார் சபாநாயகர் கரு ஜெயசூரிய.

பதவியில் இருந்து இறங்க மறுக்கிறது மகிந்த அணி

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பை நிராகரித்துள்ள, அரசாங்கத் தரப்பு, மகிந்த ராஜபக்ச பதவியில் இருந்து விலகமாட்டார் என்று அறிவித்துள்ளது.

சிறிலங்காவில் என்ன நடக்கிறது? – செய்திகளின் சங்கமம்

இன்று காலை தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவைச் சந்தித்த ஐதேகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது தொடர்பாக கலந்துரையாடியதுடன், ஜனநாயகத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரியுள்ளது.

அரசிதழ் அறிவிப்புக்காக தயார் நிலையில் அரசாங்க அச்சகம்

அவசர அரசிதழ் அறிவித்தல்களை வெளியிடுவதற்காக நேற்றுக்காலை தொடக்கம், அரசாங்க அச்சப் பணியகம் தயார் நிலையில் இருப்பதாக, அதன் தலைமை அதிகாரியான கங்க லியனகே தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தை கூட்டும் முடிவை சிறிலங்கா அதிபர் இன்னமும் எடுக்கவில்லை

நாடாளுமன்றத்தைக் கூட்டுவது தொடர்பாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று, அதிபரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மகிந்தவை சபாநாயகர் ஏற்கவில்லை – ஐதேக

சிறிலங்காவின் பிரதமராக, மகிந்த ராஜபக்சவை, சபாநாயகர் கரு ஜெயசூரிய ஏற்றுக் கொள்ளவில்லை என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

சம்பந்தனுக்கு சார்பான சபாநாயகரின் முடிவுக்கு எதிராக நீதிமன்றத்தை நாட முடியாது

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பாக சபாநாயகர் எடுத்துள்ள முடிவுக்கு எதிராக எவரும், நீதிமன்றத்தை நாட முடியாது என்று நாடாளுமன்ற அவை முதல்வரும், அமைச்சருமான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

பிரதி சபாநாயகர் பதவிக்கு கூட்டு அரசின் பங்காளி கட்சிகள் போட்டி

பிரதி சபாநாயகர் பதவியைக் கைப்பற்றுவதற்காக, கூட்டு அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள் இரண்டும், போட்டியில் இறங்கியுள்ளன.