மேலும்

Tag Archives: அதிகாரப்பகிர்வு

கனடா போன்ற அதிகாரப் பகிர்வு முறையே சிறிலங்காவுக்கு அவசியம் – சம்பந்தன்

சிறிலங்காவின் புதிய அரசியலமைப்பு கனடா போன்ற நாடுகளில் காணப்படும் அதிகாரப்பகிர்வு முறைகளின் அடிப்படையில் அமைய வேண்டும். என்று, சிறிலங்காவுக்கான கனேடியத் தூதுவரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

பிரச்சினையை தீர்க்காவிடின் அனைத்துலக அழுத்தம் தீவிரமடையும் – சம்பந்தன் எச்சரிக்கை

பிரச்சினைக்கு உள்நாட்டில் தீர்வு காணப்படாவிடின், சிறிலங்கா மீதான அனைத்துலக அழுத்தம் மேலும் மோசமடையும் என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் எச்சரித்துள்ளார்.

அரசியலமைப்பு திருத்தம் குறித்த இடைக்கால அறிக்கை – அடுத்த மாத இறுதியில் விவாதம்

அரசியலமைப்பு பேரவையில், அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பான விவாதம் ஜூன் மாத இறுதியில் இடம்பெறுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இன்று அரசியலமைப்பு பேரவை கூடுகிறது – இடைக்கால அறிக்கையை சமர்ப்பிக்கிறார் ரணில்

புதிய அரசியலமைப்பு குறித்த இடைக்கால அறிக்கை, அரசியலமைப்பு பேரவையாக அறிவிக்கப்பட்டுள்ள சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அதிகபட்ச அதிகாரப்பகிர்வை வழங்குமாறு சிறிலங்காவிடம் இந்தியா கோரிக்கை

எல்லா இலங்கையர்களினதும் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், அதிகபட்ச அதிகாரப்பகிர்வு வழங்குமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பில் 13வது திருத்தத்தை அடிப்படையாக கொண்ட அதிகாரப்பகிர்வு – இந்தியா விருப்பம்

13ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள அதிகாரப் பகிர்வை அடிப்படையாக கொண்டு, புதிய அரசியலமைப்பு வரையப்படுவதை இந்தியா விரும்புவதாக, சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரும் அதிகாரப்பகிர்வுக்கு இடமில்லை – என்கிறார் மகிந்த

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், கூட்டமைப்பு அதிகாரப்பகிர்வைக் கோரினாலும், நாட்டைப் பிரிக்க ஐக்கிய மக்கள் கூந்திர முன்னணி இடமளிக்காது என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

ஏழு ஆசனங்களையும் தாருங்கள், இறுதித்தீர்வைப் பெற்றுத் தருவோம் – யாழ்ப்பாணத்தில் சம்பந்தன்

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏழு ஆசனங்களையும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்குங்கள்,  அடுத்த ஆண்டு இறுதிக்குள் நல்லதொரு தீர்வை பெற்று தருவோம் என்று தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

ஒற்றையாட்சிக்குள் அதிகபட்ச அதிகாரப்பகிர்வு – ஐதேகவின் தேர்தல் வாக்குறுதி

அனைத்து தரப்பினரின் இணக்கத்துடன், ஒரே நாட்டுக்குள் அதிகபட்ச அதிகாரப்பகிர்வு மூலமே இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்று நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.