சிறிலங்கா தொழிற்கட்சியின் மூலம் பிரதமர் பதவிக்குப் போட்டியிட மகிந்த முடிவு
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச வரும் நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் பதவிக்காக, சிறிலங்கா தொழிற்கட்சி மூலம் போட்டியிட முடிவு செய்துள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச வரும் நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் பதவிக்காக, சிறிலங்கா தொழிற்கட்சி மூலம் போட்டியிட முடிவு செய்துள்ளார்.
இந்திய ஆதிக்க விரிவாக்கத்தை எதிர்த்தமையே முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கம் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டதற்கான காரணம் என்று, முன்னாள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சரும், அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் கொழும்பில் இடம்பெற்ற ஆட்கடத்தல்கள் தொடர்பாக, சிறிலங்கா கடற்படையில் இருந்து ஓய்வுபெற்ற உயர்அதிகாரி ஒருவர், குற்றப் புலனாய்வுப் பிரிவினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
“நான் வடக்கு, கிழக்கு வாக்குகளைத் தவறாகக் கணிப்பிட்டிருந்தேன். கிழக்கு மற்றும் வடக்கில் இப்படி அமையும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. மாகாணசபைத் தேர்தல்களில் கூட, 55 சதவீத மக்களே வாக்களித்திருந்தனர். ஆனால் இத்தடவை 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் வாக்களித்தனர். இது எப்படி என்பது எனக்குத் தெரியாது.”
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை நேற்று தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
சிறிலங்காவின் புதிய அரசாங்கம் சீனா விவகாரத்தில் நியாயமாக நடந்து கொள்ளவில்லை என்றும், சீனாவை குற்றவாளி போல நடத்துவதாகவும், குற்றம்சாட்டியுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால், கொடுக்கப்பட்டதைப் போன்று முன்னுரிமைச் சலுகைகள், சீன நிறுவனங்களுக்கு இனிமேல் சிறிலங்காவில் வழங்கப்படாது என்று, சிறிலங்கா நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு அணியில் இருந்து, அவரது மகனான லெப்.யோசித ராஜபக்ச நீக்கப்பட்டு, சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, அரசியலில் இருந்து விலகி விட்டதாகவும், எனவே, அவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு இடமளிக்குமாறு கோரமாட்டார் என்றும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரண குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவினால், அம்பாந்தோட்டையில் தனது பெயரில் அமைக்கப்பட்ட, மாத்தல அனைத்துலக விமான நிலையம் இரவு நேரத்தில் மூடப்படவுள்ளது.