மேலும்

Tag Archives: நுழைவிசைவு

600 வெளிநாட்டவர்களை நாடு கடத்த சிறிலங்கா பிரதமர் உத்தரவு

இஸ்லாமிய பாடசாலைகளிலும், மதரசாக்களிலும், போதனைகளில் ஈடுபடும், 600 வெளிநாட்டவர்களை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

36 நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டணமில்லா வருகை நுழைவிசைவு

வரும் மே முதலாம் நாள் தொடக்கம் 36 நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு, வருகை நுழைவிசைவு, கட்டணமின்றி வழங்கப்படவுள்ளது.

நுழைவிசைவின்றி வர முயன்றார் நாமல் – அமெரிக்கா

செல்லுடிபடியான நுழைவிசைவுடன் பயணம் செய்ய முற்பட்டதால் தான், நாமல் ராஜபக்ச அமெரிக்காவுக்குப் பயணம் செய்ய முடியாமல் மொஸ்கோவில் தடுக்கப்பட்டார் என்று அமெரிக்க எல்லைக் காவல் பிரிவு தெரிவித்துள்ளது.

மியான்மாரில் இருந்து வந்த பிக்குகளுக்கு கட்டுநாயக்கவில் நுழைவிசைவு மறுப்பு

மியான்மாரில் இருந்து சிறிலங்கா வந்த பௌத்த பிக்குகளின் குழு ஒன்றுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகளால் நுழைவிசைவு மறுக்கப்பட்டுள்ளது.

இலங்கையர்களுக்கான நுழைவிசைவு கொள்கையில் மாற்றமில்லை – அமெரிக்கா

இலங்கையர்களுக்கான அமெரிக்க நுழைவிசைவு கொள்கையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

குறிபார்த்துச் சுடும் சீனர் கொழும்பில் கைது – முக்கிய பிரமுகரை கொல்லும் சதித் திட்டம்?

குறிபார்த்துச் சுடுவதில் தேர்ச்சி பெற்ற, பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய சீனர் ஒருவர், கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சிறிலங்காவில் மிக முக்கிய பிரமுகர் ஒருவரை இலக்கு வைக்கத் திட்டமிட்டிருந்தாரா என்ற சந்தேகத்தில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவுக்கு நுழைவிசைவு மறுத்தது அமெரிக்கா

சிறிலங்காவின் முன்னாள் கூட்டுப்படைகளின் தளபதியும், பிரேசிலுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளவருமான, ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவுக்கு, அமெரிக்கா நுழைவிசைவு வழங்க மறுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையர்களுக்கு வருகை நுழைவிசைவு வழங்குகிறது இந்தியா

சிறிலங்காவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு, இந்திய விமான நிலையங்களில் வைத்து வருகை நுழைவிசைவு வழங்கும் நடைமுறை இன்று தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஏப்ரல் 14 : இலங்கையர்களுக்கு மோடி கொடுத்த வாக்குறுதி காப்பாற்றப்படுமா?

சிறிலங்காவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏப்ரல் 14ம் நாள் தொடக்கம், வருகை நுழைவிசைவு வழங்கப்படும் என்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உறுதிமொழி உடனடியாக நடைமுறைப்படுத்தப்படுமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் தினமும் 40 சட்டவிரோத குடியேற்றவாசிகள் கைது

பிரித்தானியாவில் நாளொன்றுக்கு 40 சட்டவிரோத குடியேற்றவாசிகள், கைது செய்யப்படுவதாக, அந்த நாட்டின் குடிவரவுத்துறை அதிகாரிகளை மேற்கோள்காட்டி, தி ரெலிகிராப் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.