மேலும்

Tag Archives: தேர்தல்

தமிழ்நாட்டில் உள்ள அகதிகளுக்கு சிறிலங்கா தேர்தலில் வாக்களிக்க வாய்ப்பு?

தமிழ்நாட்டில் அகதிகளாகத் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு, சிறிலங்காவில் நடைபெறும் தேர்தலில் வாக்களிப்பதற்கான வாய்ப்பு விரைவில் கிடைக்கக் கூடும் என்று சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் ஓகஸ்ட் 27ம் நாள் நாடாளுமன்றத் தேர்தல்? – கொழும்பு வாரஇதழ் தகவல்

சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஓகஸ்ட் 27ம் நாள் நடைபெறலாம் என்று வலுவாக எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பு ஆங்கில  வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மே இறுதிப் பகுதிக்கு தள்ளிப் போகிறது நாடாளுமன்றக் கலைப்பு

சிறிலங்கா நாடாளுமன்றம், இந்த மாத இறுதியிலேயே கலைக்கப்படும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.முன்னதாக, எதிர்வரும் 20ம் நாள் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என எதிர்வு கூறப்பட்டது.

வரும் புதன்கிழமை கலைக்கப்படுகிறது சிறிலங்கா நாடாளுமன்றம்?

சிறிலங்கா நாடாளுமன்றம் வரும் புதன்கிழமை (மே 20ம் நாள்) கலைக்கப்படலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுவதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பலம் பெற்றுள்ள சிறிலங்கா ஆதரவு அணி – தமிழருக்குப் பின்னடைவு

பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலைப் புலிகள் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் தோற்கடிக்கப்பட்டுள்ளதானது, சிறிலங்காவுக்கு நல்ல செய்தி என்று சிறிலங்காவுக்கான கொன்சர்வேட்டிவ் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த அமால் அபேகுணவத்தன தெரிவித்துள்ளார்.

தமிழ்மக்களின் கோரிக்கை மீது கவனம் செலுத்த வேண்டும் – ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆசிரியர் கருத்து

சிறிலங்கா அதிபர் தனது முதல் 100 நாள் ஆட்சியையும் பூர்த்தியாக்கியுள்ளார். தனக்கு முன்னர் நாட்டை ஆட்சி செய்த மகிந்த ராஜபக்சவை விட தனது நிர்வாகத்தை வேறுபடுத்திக் காண்பிப்பதற்காகவே மைத்திரிபால சிறிசேன 100 நாள் செயற்றிட்டத்தை அறிமுகப்படுத்தியிருந்தார்.

மே 05ம் நாள் சிறிலங்கா நாடாளுமன்றம் கலைப்பு, ஜூன் 27இல் தேர்தல்?- ஆங்கில வாரஇதழ் தகவல்

சிறிலங்கா நாடாளுமன்றம் வரும் மேமாதம் 05ம் நாள் கலைக்கப்பட்டு ஜூன் மாத இறுதியில் தேர்தல் நடத்தப்படலாம் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்றக் கலைப்பு மே மாதம் வரை தாமதமாகலாம் – சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா நாடாளுமன்றம் கலைக்கப்படுவது மே மாதம் வரை தாமதமடையலாம் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று சிறிலங்கா நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்திருந்த அவர், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவைச் சந்தித்தார்.

புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று தேர்தலுக்கு எதிராக உயர்நீதிமன்றில் மனு

புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று பிரதேசசபைகளுக்கு நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று தேர்தல் பரப்புரை இன்று நள்ளிரவுடன் முடிவு

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று பிரதேச சபைகளுக்கு வரும் 28ம் நாள் நடக்கவுள்ள தேர்தலுக்கான பரப்புரைகள் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வரவுள்ளன.