மேலும்

Tag Archives: சிறிலங்கா

ஜெனிவாவில் 2 ஆண்டுகள் காலஅவகாசம் கோரவுள்ளதை உறுதிப்படுத்தியது சிறிலங்கா

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் கோரப் போவதாக, சிறிலங்கா அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

மலேசியாவில் இலங்கைத் தமிழர்கள் எதிர்ப்புப் போராட்டம் நடத்தவில்லை – என்கிறார் மங்கள

மலேசியாவில் சிறிலங்காவுக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுகளைச் சுமத்தி எதிர்ப்பு வெளியிடுபவர்கள், இலங்கைத் தமிழர்கள் அல்ல என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் சீன முதலீட்டாளர்களின் குழு – 150 தொழிற்சாலைகளை அமைக்க திட்டம்

சீன முதலீட்டாளர்கள் குழுவொன்று சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டு, புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.

சீனாவுக்கு 15 ஆயிரம் ஏக்கர் காணிகளை வழங்குவதற்கு மகிந்த எதிர்ப்பு

முதலீட்டுத் தேவைகளுக்காக அம்பாந்தோட்டையில் 15 ஆயிரம் காணிகளை சீனாவுக்கு வழங்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் முடிவுக்கு சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் புதிய இராஜாங்கச் செயலர் அடுத்த ஆண்டு சிறிலங்கா வருவார்

அமெரிக்காவின் புதிய இராஜாங்கச் செயலர், அடுத்த ஆண்டில் சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொள்வார் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ஆவா குழுவில் 62 பேர், 38 பேர் இதுவரை கைது – நாடாளுமன்றில் தகவல்

வடக்கில் குழப்ப நிலையை ஏற்படுத்தும் நோக்கில் செயற்பட்ட ஆவா குழுவைச் சேர்ந்த 38 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதரகம் மீது கல்வீசித் தாக்குதல்

கொழும்பில் உள்ள முன்னணி வெளிநாட்டுத் தூதரகம் ஒன்றின் மீது கல்வீச்சு நடத்தப்படுவதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ட்ரம்பின் வெற்றிக்கு காரணம் கூறுகிறார் கோத்தா

தொழில்சார் அரசியல்வாதிகளை மக்கள் வெறுக்கிறார்கள் என்பதை அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் ஈட்டிய வெற்றி எடுத்துக் காட்டுவதாக சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நௌரு, மனுஸ் தீவு தடுப்பு முகாம்களில் உள்ள அகதிகள் அமெரிக்காவில் குடியேற்றப்படவுள்ளனர்?

அவுஸ்ரேலியாவில் புகலிடம் தேடிச் சென்று, நௌரு மற்றும் மனுஸ் தீவில் உள்ள தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள 1800 அகதிகள், அமெரிக்காவில் குடியேற்றப்படவுள்ளதாக அவுஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுக் கூட்டத்தில் சிறிலங்கா விவகாரம்

ஜெனிவாவில் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் கூட்டத்தில் சிறிலங்கா விவகாரமும் மீளாய்வு செய்யப்படவுள்ளது.