மேலும்

Tag Archives: சரத் பொன்சேகா

எனக்கு எதிராக மகிந்த வாக்களிக்கமாட்டார் – சரத் பொன்சேகா

நாடாளுமன்றத்தில் கூட்டு எதிரணியினர் தனக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வந்தால், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நிச்சயமாக அதற்கு ஆதரவாக வாக்களிக்கமாட்டார் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தவறு செய்தவர்களை பாதுகாப்பது நியாயமற்றது – அரச தலைவர்களுக்கு சரத் பொன்சேகா பதிலடி

இராணுவ சீருடையில் போர்வீரர்கள் என்ற போர்வைக்குள் இருந்து கொண்டு தவறு செய்தவர்களை பாதுகாக்க முற்படுவது நியாயமற்றது என்பதை ஒவ்வொரு அரசியல்வாதியும், அரசாங்கத்தில் உள்ள தலைவர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்று சிறிலங்காவின் அமைச்சரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகாவிடம் இருந்து பீல்ட் மார்ஷல் பட்டத்தை பறிக்க வேண்டும் – வாசுதேவ நாணயக்கார

சரத் பொன்சேகாவிடம் இருந்து பீல்ட் மார்ஷல் பட்டத்தை பறித்து. அமைச்சரவையை விட்டு அவரை வெளியேற்ற வேண்டும் என்று கூட்டு எதிரணி வலியுறுத்தியுள்ளது.

சிறிலங்கா இராணுவத் தளபதியைப் பாராட்டுகிறார் மகிந்த

சிறிலங்கா இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்கவை நாட்டு மக்கள் பாராட்ட வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜெனரல் ஜயசூரியவுக்கு ஆதரவாக அமைச்சர்கள் – சரத் பொன்சேகாவின் கருத்து தனிப்பட்டதாம்

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரிய போர்க்காலத்தில் குற்றங்களை இழைத்தார் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறியமை, அவரது தனிப்பட்ட கருத்தே என்று சிறிலங்கா அமைச்சர்கள் மகிந்த சமரசிங்கவும், ருவான் விஜேவர்த்தனவும் தெரிவித்துள்ளனர்.

சரத் பொன்சேகா வழங்கிய ஆவணத்தை வைத்து மிரட்டுகிறார் ஜெனரல் ஜயசூரிய

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சுமத்திய போர்க்குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரிய, போர் நடவடிக்கைகளில் தனக்கு எந்தத் தொடர்பும் இருக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றச்சாட்டுகளுக்கு பொன்சேகாவே பொறுப்பு – ஜெனரல் ஜயசூரிய

போர்க்குற்றச்சாட்டுகளுக்கு சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவே பொறுப்புக் கூற வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகா மீது போர்க்குற்றம் சுமத்தப்படாதது ஏன்? – கேள்வி எழுப்புகிறது பொது ஜன முன்னணி

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக, போர்க்குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு செய்யப்படாதது ஏன் என்று, மகிந்த ராஜபக்ச ஆதரவு கட்சியான, சிறிலங்கா பொதுஜன முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது.

விக்னேஸ்வரனின் தாளத்துக்கு ஆடமுடியாது – சரத் பொன்சேகா

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் தாளத்துக்கு சிறிலங்கா அரசாங்கம் ஆட முடியாது என்று சிறிலங்கா அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகா குறித்து அமைச்சரவையில் முடிவெடுக்கப்படவில்லை- சிறிலங்கா பிரதமர்

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை இராணுவத் தலைமைப் பதவிக்கு நியமிக்கும் எந்த முடிவும் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படவில்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.