மேலும்

Tag Archives: சரத் பொன்சேகா

‘புனுகுப் பூனை’க்குப் பொருத்தமான பதவி – பொன்சேகாவைக் கிண்டலடிக்கும் நாமல்

அமைச்சரவை மாற்றத்தின் போது, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு மாத்திரமே விஞ்ஞான முறையின் அடிப்படையில் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளதாக, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் 18 அமைச்சர்கள் பதவியேற்பு – விஜேதாச உள்ளே, ரவி வெளியே

சிறிலங்காவில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை மறுசீரமைப்பின் போது, 18 அமைச்சர்கள் புதிய அல்லது மேலதிக அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டனர்.

ஐதேகவின் போர்க்கொடியால் கொழும்பு அரசியலில் மீண்டும் பரபரப்பு

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியினரை வெளியேற்ற வேண்டும் என்று ஐதேக போர்க்கொடி உயர்த்தியுள்ளதால், கொழும்பு அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பொன்சேகாவை சட்டம், ஒழுங்கு அமைச்சராக நியமிக்குமாறு மீண்டும் பரிந்துரைக்கிறது ஐதேக

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை, சட்டம், ஒழுங்கு அமைச்சராக நியமிக்குமாறு மீண்டும் பரிந்துரைப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்திருப்பதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கு அமைச்சை இழக்கிறார் சாகல?

அமைச்சரவை மாற்றத்தின் போது, சட்டம் ஒழுங்கு அமைச்சர் பதவியில் இருந்து சாகல ரத்நாயக்க விலக்கப்படவுள்ளார் என்று அரசாங்கம் வட்டாரங்களை மேற்கொள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வடக்கிலுள்ள சிறிலங்கா இராணுவ முகாம்கள் அகற்றப்படாது – சரத் பொன்சேகா

வடக்கில் உள்ள முக்கிய இராணுவ முகாம்கள் அகற்றப்படாது என்றும், சிறிலங்கா இராணுவத்தினர் அங்கே தொடர்ந்தும் நிலைகொண்டிருப்பார்கள் என்றும் சிறிலங்காவின் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மகிந்தவின் குற்றங்களை அம்பலப்படுத்தவே அரசியலில் இறங்கினேன் – சரத் பொன்சேகா

தனது பிரதான எதிரியான மகிந்த ராஜபக்சவின் கடந்த காலத் தவறுகளை அம்பலப்படுத்தவதற்காகவே தாம் அரசியலில் நுழைந்து அமைச்சர் பதவியைப் பெற்றதாக, சிறிலங்கா அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகாவும் போர்க்குற்றச்சாட்டுகளும்- அனைத்துலக வல்லுனரின் பார்வை

சிறிலங்காவில் இடம்பெற்ற பல்வேறு யுத்த மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சிறிலங்கா இராணுவத்திற்கு எதிராக தற்போது மீண்டும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தென் அமெரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் அனைத்துலக உண்மை மற்றும் நீதி நிகழ்ச்சித் திட்டத்தால் ஜெனரல் ஜெகத் ஜயசூரியவிற்கு எதிராக – இவர் தூதுவராகக் கடமையாற்றிய பிரேசில் மற்றும் கொலம்பியாவிலும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சரத் பொன்சேகாவின் கருத்து அரசாங்கத்தின் நிலைப்பாடு அல்ல – நாடாளுமன்றத்தில் அறிவிப்பு

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரிய தொடர்பாக, அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வெளியிட்டது, அவரது தனிப்பட்ட கருத்தே என்றும், அது அரசாங்கத்தின் நிலைப்பாடு அல்ல என்றும், நாடாளுமன்றத்தில் அவை முதல்வரான அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல அறிவித்துள்ளார்.

“சரத் பொன்சேகா ஒரு பைத்தியக்காரன்” – நாடாளுமன்றில் வீரவன்ச ஆவேசம்

அமைச்சர் சரத் பொன்சேகா ஒரு பைத்தியம் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்ச நாடாளுமன்றத்தில் ஆவேசத்துடன் கூறியுள்ளார்.