மேலும்

Tag Archives: ஐ.நா

குடும்பங்களைப் பிரிக்கிறது அவுஸ்ரேலியா – ஐ.நா கடும் கண்டனம்

புகலிடம் தேடிய, கணவனை சிறிலங்காவுக்கு நாடு கடத்தி இலங்கை தமிழ் குடும்பத்தைப் பிரித்த அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் செயலுக்கு ஐ.நா கண்டனம் தெரிவித்துள்ளது.

பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தக்கூடிய நிலையில் ஐ.நா இல்லை – ஐ.நா, பொதுச்செயலர்

போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலைகளுக்கு பொறுப்புகூறுவதை இன்னமும் ஐ.நாவினால் முற்றிலுமாக உறுதிப்படுத்தக் கூடிய நிலை இல்லை என்று தெரிவித்துள்ளார் ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ்.

ஐ.நாவின் கொள்கைகளுடன் சிறிலங்கா இணங்க வேண்டும் – ஐ.நா பேச்சாளர்

ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளில் சிறிலங்கா தனது படைகளை  ஈடுபடுத்துவதற்கு, ஐ.நாவின் கொள்கைகளுடன் இணங்க வேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலரின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

ஐ.நாவின் மனிதஉரிமைச் செயற்பாடுகளைப் பலவீனப்படுத்தும் ரஷ்யா, சீனா

அனைத்துலக நாடுகளில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையால் முன்னெடுக்கப்படும் முயற்சிகளை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளை சீனா மற்றும் ரஸ்யா ஆகிய இரு நாடுகளும் வெற்றிகரமாக முன்னெடுத்து வருவதாக இராஜதந்திரிகள் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

ஜெனிவாவில் நேற்று நடக்கவிருந்த சிறிலங்கா குறித்த விவாதம் திங்களன்று

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், நேற்று நடைபெறவிருந்த சிறிலங்கா குறித்த பூகோள கால மீளாய்வு விவாதம், வரும் 19ஆம் நாள் நடைபெறும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை குறித்த விவாதம் – ஏமாற்றியது ஜெனிவா

ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடரில், இன்று நடைபெறவிருந்த சிறிலங்கா தொடர்பான பூகோள காலமீளாய்வு விவாதம், பிற்போடப்பட்டுள்ளது.

சிறிலங்கா தலைவர்களுடன் ஐ.நா உதவிச் செயலர் சந்திப்பு – பாதுகாப்பு அமைச்சில் முக்கிய பேச்சு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நா உதவிச் செயலர் ஜெப்ரி பெல்ட்மன், நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவையும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

சிறிலங்கா விரைகிறார் அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நாவின் உதவிச் செயலர்

அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நாவின் உதவிச் செயலர் ஜெப்ரி பெல்ட்மன் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் இதனைத் தெரிவித்தார்.

அரைக் கம்பத்தில் பறக்கும் ஐ.நா கொடி – வெள்ளியன்று கொழும்பில் உனாவின் இறுதி நிகழ்வு

உடல்நலக் குறைவினால் திடீரென மரணமான சிறிலங்காவுக்கான, ஐ.நாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி உனா மக்கோலியின் இறுதிநிகழ்வு வரும் வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது.

சிறிலங்கா வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை அனைத்துலக சமூகம் உறுதி செய்ய வேண்டும் – சம்பந்தன்

அனைத்துலக சமூகத்துக்கும், சிறிலங்கா மக்களுக்கும் சிறிலங்கா அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை, அனைத்துலக  சமூகம் உறுதி செய்ய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், வலியுறுத்தியுள்ளார்.