மேலும்

பிரிவு: செய்திகள்

400 மில்லியன் டொலர் செலவில் போர் விமானங்கள் எதற்கு? – திஸ்ஸ விதாரண கேள்வி

சிறிலங்கா விமானப்படைக்கு, எதற்காக 400 மில்லியன் டோலர் செலவில் போர் விமானங்களை வாங்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார், முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண.

வெளிநாடுகளில் புகலிடம் தேடியோருக்கு சிறிலங்கா கடவுச்சீட்டு – மகிந்த விதித்த தடை நீக்கம்

அரசியல் அழுத்தங்களால் வெளிநாடுகளில் புகலிடம் கோரிய இலங்கையர்களுக்கு, சிறிலங்கா கடவுச்சீட்டுகளை வழங்க, விதிக்கப்பட்டிருந்த தடையை சிறிலங்கா அரசாங்கம் நீக்கியுள்ளது.

சிறிலங்கா அதிபர் பங்கேற்ற நட்சத்திர விடுதி திறப்பு விழாவில் தீவிபத்து

அம்பாந்தோட்டையில் நேற்று மாலை சிறிலங்கா அதிபரால் திறந்து வைக்கப்பட்ட சங்கிரி-லா நட்சத்திர விடுதியில் நடந்த கலை நிகழ்வுகளின் போது, தீவிபத்து ஏற்பட்டது.

சிறிலங்காவில் என்ன செய்கிறார் ஆர்மிரேஜ்?

அமெரிக்கா மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் தமது நிறுவனங்களை அனைத்துலக வர்த்தக அபிவிருத்தியில் முன்னேற்றுவதற்கும் தமக்கான மூலோபாயத் திட்டங்கள் மற்றும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் ஆகியவற்றுக்கும் உந்துசக்தியாக விளங்கும் Armitage International  என்கின்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார் றிச்சார்ட் ஆர்மிரேஜ்.

சீனத் தூதுவரைச் சந்தித்தார் சம்பந்தன்

சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் யி ஷியான்லியாங்குடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் பேச்சுக்களை நடத்தியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் உறவுகளை வலுப்படுத்துகிறது ஐதேக

ஐதேக பொதுச்செயலரும் அமைச்சருமான கபீர் காசிம் நேற்று பீஜிங்கில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் அனைத்துலக திணைக்களத் தலைவர் சொங் தாவோவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

சிறிலங்காவுக்கு உதவிப் பொருட்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது பங்களாதேஸ் போர்க்கப்பல்

சிறிலங்காவில் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மற்றொரு தொகுதி உதவிப் பொருட்களை, ஏற்றிக் கொண்டு பங்களாதேஸ் கடற்படைக் கப்பல் ஒன்று நேற்றுமாலை கொழும்பு நோக்கிப் புறப்பட்டுள்ளது.

சம்பந்தனைச் சந்தித்தார் நோர்வே இராஜாங்கச் செயலர்

இரண்டு நாள் பயணமாக நேற்று கொழும்பு வந்த, நோர்வே வெளிவிவகார அமைச்சின் இராஜாங்கச் செயலர், ரோர் ஹட்ரெம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

ஜெனிவா நெருக்கடியை வெற்றி கொள்ள முடியும் – மலிக் சமரவிக்கிரம

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு எதிரான விவகாரத்தை வெற்றிகொள்ள முடியும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளதாக, அனைத்துலக வர்த்தக மற்றும், மூலோபாய கொள்கைகள் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்தார்.

100 வீடுகளுடன் சீன- சிறிலங்கா நட்புறவுக் கிராமத்தை உருவாக்குகிறது சீனா

அண்மைய இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, சிறிலங்கா- சீன நட்புறவுக் கிராமத்தில் 100 வீடுகளை அமைத்துக் கொடுக்கவுள்ளதாக சீனா அறிவித்துள்ளது.