மேலும்

பிரிவு: செய்திகள்

ஐ.நா அமைதிப்படையில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை – சண்டை வாகனங்களுடன் களமிறங்கவுள்ளது

ஐ.நா அமைதிப்படையில் சிறிலங்காவின் சிறப்பு அதிரடிப்படை முதல்முறையாக இணைத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில், இதற்காக  864.08 மில்லியன் ரூபா செலவிலான பாதுகாப்புத் தளபாடங்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளன.

போர்க்குற்ற விசாரணை தேவையில்லை – சந்திரிகா

போர்க்குற்ற விசாரணை தேவையற்றது என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான பணியகத்தின் தலைவராக உள்ள சந்திரிகா குமாரதுங்க, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே இதனைக் கூறியுள்ளார்.

சிறிலங்கா அதிபருடன் நல்லிணக்க கலந்தாய்வு செயலணி சந்திப்பு

நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வு செயலணியின் உறுப்பினர்கள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை – ருவான் விஜேவர்த்தன

சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

தாஜுதீன் கொலை – சிறிலங்கா இராணுவ உயர் அதிகாரிகள் இருவரிடம் விசாரணை

ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் படுகொலை தொடர்பாக, சிறிலங்கா இராணுவ உயர்மட்ட அதிகாரிகள் இருவர், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கொழும்பு வந்தது சீனக் கடற்படையின் ஆய்வுக் கப்பல்

சீன மக்கள் விடுதலை இராணுவத்தின், சமுத்திரவியல் ஆய்வுக் கப்பலான, குவான் சான்கியாங் நேற்று கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ளது.

இலங்கையர்களுக்குத் தடையில்லை – அமெரிக்கா

அமெரிக்காவுக்குள் நுழைய இலங்கையர்களுக்குத் தடை விதிக்கப்படவில்லை என்று கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்துக்கான ஆறு சாத்தியப்படுமா?

‘யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி நீர் வழங்கல் மற்றும் சுகாதாரத் திட்டத்திற்காக’ 2010ல் ஆசிய அபிவிருத்தி வங்கியால் 130 மில்லியன் டொலர் பெறுமதியான கடன் வசதி மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டத்திற்கான உள்ளுர்ச் செலவுகளுக்கான 26 மில்லியன் டொலர் நிதியானது சிறிலங்கா அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியிருந்தது.

சிறிலங்காவில் சாதகமான முன்னேற்றங்கள் – பிரெஞ்சு அதிபர்

சிறிலங்காவில் சாதகமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக, பிரெஞ்சு அதிபர் பிராங்கோயிஸ் ஹொலன்ட் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் அதிபர் மாளிகையில் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு பிரெஞ்சு அதிபர் புத்தாண்டு வரவேற்பு விருந்துபசாரத்தை அளித்தார்.

ஆபிரிக்காவுடன் நெருங்கும் சிறிலங்கா – எதியோப்பியாவில் புதிய தூதரகம் அமைக்கிறது

ஆபிரிக்க நாடுகளுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதற்காக, ஆபிரிக்க ஒன்றியத்தின் தலைமையகம் அமைந்துள்ள எதியோப்பியாவில், தூதரகம் ஒன்றை சிறிலங்கா திறக்கவுள்ளது.