பூநகரியில் புதிதாக முளைத்தது பௌத்த வழிபாட்டுத் தலம்
கிளிநொச்சி – பூநகரிப் பகுதியில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா இராணுவத்தின் 66-1 ஆவது படைப்பிரிவினால், புதிய பௌத்த வழிபாட்டுத்தலம் ஒன்று கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி – பூநகரிப் பகுதியில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா இராணுவத்தின் 66-1 ஆவது படைப்பிரிவினால், புதிய பௌத்த வழிபாட்டுத்தலம் ஒன்று கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வரும் ஓகஸ்ட் மாதம் 17ஆம் நாள் சிறிலங்கா நாடாளுமன்றதுக்கு நடைபெறவுள்ள தேர்தலில் வன்னி தேர்தல் மாவட்டத்தில், மொத்தம் 28 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 20 ஆசனங்களைக் கைப்பற்றும் என்று நம்புவதாக, கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் 5 மாவட்டங்களிலும் உள்ள, 29 நாடாளுமன்ற ஆசனங்களுக்காக 44 வேட்பாளர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிறுத்தவுள்ளது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு இடையிலான ஆசனப் பங்கீடு குறித்த பேச்சுக்களில் சுமுகமான முடிவு எட்டப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் போராளிகளின் புதிய அமைப்பான, ஜனநாயகப் போராளிகள் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு போட்டியிட வாய்ப்பளிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறுப்புத் தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தமை, குடும்ப உறுப்பினர் ஒருவர் விடுதலைப் புலிகள் உறுப்பினராக இருந்தமை ஆகிய காரணங்களுக்காக யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த கிராம அதிகாரிகள் 11பேரை சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் பஸ்நாயக்க புனர்வாழ்வுக்கு அனுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு இடையிலான ஆசனப் பங்கீடு குறித்து, நாளை வவுனியாவில் நடைபெறவுள்ள உயர்மட்டக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.
வெளிநாடுகளுக்கான சிறிலங்காவின் புதிய தூதுவர்கள் வடக்கிற்கு பயணம் மேற்கொண்டு அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்து வருகின்றனர்.
தேர்தல்முறையை மாற்றியமைப்பதற்கான 20ஆவது திருத்தச்சட்ட யோசனை, சிறுபான்மையினருக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், அதனை ஒருபோதும், ஆதரிக்க முடியாது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.