மேலும்

செய்தியாளர்: Vanni

முதலமைச்சர் தலைமையில் முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வு

இறுதிக்கட்டப் போரில், முள்ளிவாய்க்காலில் சிறிலங்காப் படைகளால் படுகொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை நினைவு கூரும், நிகழ்வு இன்று காலை முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றது.

சிதம்பரபுரம் நலன்புரி முகாமில் இருந்த 194 பேருக்கு காணி உரிமைப் பத்திரங்கள்

சிதம்பரபுரம் இடம்பெயர்ந்தோர் நலன்புரி முகாமில் இருந்த 194 குடும்பங்களுக்கு, நாளை தற்காலிக காணி உரிமைப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளன.

காணாமற்போனவர்களில் மூவர் மாலைதீவு சிறையில் – பரணகம ஆணைக்குழு கண்டுபிடிப்பு

காணாமற்போனவர்களில் நான்கு பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் இரண்டு அல்லது மூன்று பேர் மாலைதீவு சிறைச்சாலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், காணாமற்போனோர் குறித்து விசாரணை செய்யும் அதிபர் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் காணாமற்போனோர் குறித்த சாட்சியங்களை பதிவு செய்கிறது பரணகம ஆணைக்குழு

காணாமற்போனோர் தொடர்பாக விசாரணைகளை நடத்தும் மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான சிறிலங்கா அதிபர் ஆணைக்குழு இன்று முல்லைத்தீவில் சாட்சியங்களைப் பதிவு செய்யும் அமர்வு ஒன்றை ஆரம்பித்துள்ளது.

முல்லைத்தீவில் சிறிலங்கா படைகளுக்கு சிறப்புப் பயிற்சி – தயார் நிலையில் வைத்திருக்க முயற்சி

முல்லைத்தீவு படைகளின் தலைமையகத்தின் கீழ் உள்ள சிறிலங்கா படையினருக்கு சிறப்பு காலாலாற்படை மற்றும் பற்றாலியன் பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வவுனியா மாணவி கொலைக்கு நீதி கோரி இன்று வடக்கில் பணிநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு

வவுனியாவில் மாணவி ஹரிஸ்ணவி வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கொடூர சம்பவத்தைக் கண்டித்தும், அதற்கு நீதிகோரியும்,  இன்று வட மாகாணத்தில், இரண்டு மணிநேர பணிநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இனந்தெரியாத நபர்களின் தாக்குதலில் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் காயம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் இந்திரராசா வவுனியாவில் நேற்றிரவு இனந்தெரியாத குழுவினரின் தாக்குதலில் காயமடைந்தார்.

சரணடைந்தோரின் பட்டியலை சமர்ப்பிக்குமாறு 58ஆவது டிவிசனுக்கு நீதிமன்றம் உத்தரவு

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரின் போது, தம்மிடம் சரணடைந்தவர்கள் பற்றிய விபரங்களை உள்ளடக்கிய ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு, 58ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரிக்கு  முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

வன்னிப் படைகளின் தலைமையக தளபதியின் இடமாற்றம் திடீரென ரத்து

சிறிலங்கா இராணுவத்தின் வன்னிப் படைகளின் தலைமையக கட்டளைத் தளபதியான மேஜர் ஜெனரல் பொனிபொஸ் பெரேராவின் இடமாற்றம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் கொட்டும் பெருமழை – நள்ளிரவில் வீடுகளுக்குள் வெள்ளம்

தொடர்ந்து கொட்டி வரும் பெருமழையினால் கிளிநொச்சி மாவட்டத்தின் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.