கனகராயன்குளத்தில் மர்மநபர்களால் சேதமாக்கப்பட்ட புத்தர்சிலை
வவுனியா- கனகராயன்குளத்தில் சிறிலங்காவின் சிறப்பு அதிரடிப்படையினரால் கைவிடப்பட்ட முகாமில், அமைக்கப்பட்டிருந்த புத்தர்சிலை நேற்று அதிகாலை இனந்தெரியாத நபர்களால் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளது.
வவுனியா- கனகராயன்குளத்தில் சிறிலங்காவின் சிறப்பு அதிரடிப்படையினரால் கைவிடப்பட்ட முகாமில், அமைக்கப்பட்டிருந்த புத்தர்சிலை நேற்று அதிகாலை இனந்தெரியாத நபர்களால் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளது.
போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த விடுதலைப் புலிகளின் பட்டியலுக்குப் பதிலாக, புனர்வாழ்வு பெற்று விடுவிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் பட்டியலை, நீதிமன்றத்தில் சமர்ப்பித்த, 58 ஆவது டிவிசன் கட்டளை அதிகாரியை முல்லைத்தீவு நீதிவான் கடிந்து கொண்டார்.
வவுனியாவில் சிங்களக் குடியேற்றக் கிராமமான போகஸ்வெவவில், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று திறந்து வைத்தார்.
இறுதிக்கட்டப் போரில், முள்ளிவாய்க்காலில் சிறிலங்காப் படைகளால் படுகொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை நினைவு கூரும், நிகழ்வு இன்று காலை முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றது.
சிதம்பரபுரம் இடம்பெயர்ந்தோர் நலன்புரி முகாமில் இருந்த 194 குடும்பங்களுக்கு, நாளை தற்காலிக காணி உரிமைப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளன.
காணாமற்போனவர்களில் நான்கு பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் இரண்டு அல்லது மூன்று பேர் மாலைதீவு சிறைச்சாலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், காணாமற்போனோர் குறித்து விசாரணை செய்யும் அதிபர் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.
காணாமற்போனோர் தொடர்பாக விசாரணைகளை நடத்தும் மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான சிறிலங்கா அதிபர் ஆணைக்குழு இன்று முல்லைத்தீவில் சாட்சியங்களைப் பதிவு செய்யும் அமர்வு ஒன்றை ஆரம்பித்துள்ளது.
முல்லைத்தீவு படைகளின் தலைமையகத்தின் கீழ் உள்ள சிறிலங்கா படையினருக்கு சிறப்பு காலாலாற்படை மற்றும் பற்றாலியன் பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வவுனியாவில் மாணவி ஹரிஸ்ணவி வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கொடூர சம்பவத்தைக் கண்டித்தும், அதற்கு நீதிகோரியும், இன்று வட மாகாணத்தில், இரண்டு மணிநேர பணிநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் இந்திரராசா வவுனியாவில் நேற்றிரவு இனந்தெரியாத குழுவினரின் தாக்குதலில் காயமடைந்தார்.