மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார் அதுரலியே ரத்தன தேரர்

சிறிலங்கா அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோரை பதவியில் இருந்து நீக்கக் கோரி, நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்தன தேரர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

நீர்கொழும்பில் வதந்தியால் பதற்றம்

நீர்கொழும்பில் உள்ள கத்தோலிக்க பாடசாலைகள் மீது இன்று தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக பரவிய வதந்தியால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

படகில் சென்ற 20 இலங்கையர்களை திருப்பி அனுப்பியது அவுஸ்ரேலியா

சிறிலங்காவில் இருந்து சட்டவிரோதமாக அவுஸ்ரேலியா செல்ல முயன்ற 20 பேர் நேற்று தனி விமானம் மூலம் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

குருணாகல மருத்துவ நிபுணர் மீது இதுவரை 51 பெண்கள் முறைப்பாடு

குருணாகல தேசிய மருத்துவமனையின் மகப்பேற்று மருத்துவ நிபுணர் ஷாபி சிகாப்தீனுக்கு எதிராக இதுவரை 51 பெண்கள் முறைப்பாடுகளை செய்துள்ளனர்.

வடக்கில் முன்னொருபோதும் இல்லாத வரட்சி – 3 இலட்சம் பேர் பாதிப்பு

தற்போது நிலவும் கடுமையான வரட்சியினால், வடக்கு மாகாணத்தில் 3 இலட்சம் மக்கள் கடும் பாதிப்புக்கு  உள்ளாகியிருப்பதாக, இடர் முகாமைத்துவ மையம் அறிவித்துள்ளது.

மோடியின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்கிறார் சிறிலங்கா அதிபர்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் கலந்து கொள்ளவுள்ளார். சிறிலங்கா அதிபர் செயலக பேச்சாளர் ஒருவர் இதனை உறுதி செய்துள்ளார்.

கூட்டமைப்பின் எதிர்ப்புக்கு மத்தியில் அவசரகாலச்சட்ட நீடிப்புக்கு நாடாளுமன்றம் அனுமதி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்ப்புக்கு மத்தியில், சிறிலங்காவில் அவசர காலச்சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கின்ற பிரேரணை- 14 மேலதிக வாக்குகளால் நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தெரிவுக்குழு அறிக்கையை வெளியிட எதிர்ப்பு – நாடாளுமன்ற எதிரொலிகள்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் இடைக்கால அறிக்கையை,  அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது விவாதம் நடத்தப்படுவதற்கு முன்னர், வெளியிட வேண்டாம் என்று ஜேவிபி கோரியுள்ளது.

தெரிவுக்குழுவில் 8 எம்.பிக்கள் – மகிந்த, மைத்திரி அணிகள் மறுப்பு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரிப்பதற்காக, 8 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தெரிவுக் குழு ஒன்றை சபாநாயகர் கரு ஜெயசூரிய நியமித்துள்ளார்.

ஜூன் 18ஆம், 19ஆம் நாள்களில் நம்பிக்கையில்லா பிரேரணை மீது விவாதம்

அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான விவாதம், வரும் ஜூன் 18ஆம், 19ஆம் நாள்களில் நடைபெறும் என்று சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.