மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

குருநாகல மருத்துவருக்கு எதிராக முஸ்லிம் பெண்ணும் முறைப்பாடு

சிங்களப் பெண்களுக்கு கருத்தரிக்க முடியாத நிலையை ஏற்படுத்தினார் என்று குற்றம்சாட்டப்படும் குருநாகல மருத்துவமனை மகப்பேற்று நிபுணர் செய்கு சியாப்தீனுக்கு எதிராக முஸ்லிம் பெண் ஒருவரும்  நேற்று முறைப்பாடு செய்துள்ளார்.

சஹ்ரான் குழுவின் 32 பேருக்கு ஊதியம் கொடுத்த மகிந்த அரசு – அரசின் கையில் சான்றுகள்

தீவிரவாதி சஹ்ரான் காசிம் தலைமையிலான தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புக்கு, மகிந்த ராஜபக்ச அரசாங்கம், நிதி கொடுப்பனவுகளை வழங்கியது என்று அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையில்லா பிரேரணை – ஜூலை 9, 10 இல் விவாதம்

சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக ஜேவிபியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை, ஜூலை 9ஆம், 10ஆம் நாள்களில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

சிறிலங்கா தலைவர்களுடன் இன்று முக்கிய பேச்சுக்களில் ஈடுபடுகிறார் அவுஸ்ரேலிய அமைச்சர்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்ரேலியாவின் உள்துறை அமைச்சர் பீற்றர் டட்டன், இன்று சிறிலங்காவின் உயர்மட்டத் தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

அசாத் சாலி, ஹிஸ்புல்லா பதவி விலகினர்

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரரின் உண்ணாவிரதப் போராட்டம், மற்றும் அவருக்கு ஆதரவாக தீவிரமடைந்து வந்த போராட்டங்களை அடுத்து, மேல் மாகாண ஆளுநர், அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோர் பதவிகளை விட்டு விலகியுள்ளனர்.

ரணிலைச் சந்திக்கிறார் மகிந்த – இன்று நடக்கிறது இரகசியப் பேச்சு

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவும், இன்று சந்தித்துப் பேச்சுக்களை நடத்தவுள்ளனர் என்று அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.

அசாத் சாலியை நீக்கி விட்டு பீலிக்ஸ் பெரேராவை மேல் மாகாண ஆளுநராக நியமிக்க திட்டம்

மேல் மாகாண ஆளுநராக உள்ள அசாத் சாலிக்குப் பதிலாக, முன்னாள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேராவை நியமிக்கும் யோசனை ஒன்று சிறிலங்கா அதிபருக்கு முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள். தெரிவிக்கின்றன.

சிறிலங்காவுடன் உறவுகளைப் பலப்படுத்த ஆதரவு – இந்திய வெளிவிவகார அமைச்சர்

சிறிலங்காவுடனான உறவுகளை பலப்படுத்தும் முயற்சிகளுக்கு ஆதரவு அளிப்பேன் என்று இந்தியாவின் புதிய வெளிவிவகார அமைச்சராக பொறுப்பேற்றுள்ள, சுப்ரமணியம் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

தேரரின் உண்ணாவிரதத்தை கண்டுகொள்ளாத மைத்திரி

அமைச்சர் றிசாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோரை பதவி நீக்கம் செய்யக் கோரி, அத்துரலியே ரத்தன தேரர் தலதா மாளிகைக்கு முன்பாக நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் தலையீடு செய்யும் எண்ணம் சிறிலங்கா அதிபருக்கு இல்லை என்று அதிபர் செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ரத்தன தேரின் உடல்நிலை சீராக உள்ளது – எஸ்.பி மட்டும் பார்வையிட்டார்

கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக, நேற்று இரண்டாவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அத்துரலியே ரத்தன தேரரின், உடல் நிலை நன்றாகவே இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.