மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

போர்க்குற்ற விசாரணை குறித்த கனடாவின் நிலைப்பாடு – வரைவைப் பொறுத்தே ஆதரவு

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக, உள்நாட்டு விசாரணைக்கு ஆதரவாக, ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வர உத்தேசித்துள்ள தீர்மானத்தை ஆதரிப்பதா இல்லையா என்று, அந்த தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே முடிவெடுக்கப்படும் என்று கனடா அறிவித்துள்ளது.

கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக இரா.சம்பந்தன் தெரிவு

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கப்பட வேண்டும், என்று கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் முதலாவது கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவராக செல்வம் அடைக்கலநாதன் தெரிவு

சிறிலங்காவின் எட்டாவது  நாடாளுமன்றத்தின் குழுக்களின் பிரதித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் தெரிவு இன்று இல்லை – கூட்டமைப்புக்கு குழுக்களின் பிரதி தலைவர் பதவி

சிறிலங்காவின் புதிய நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவு இன்று இடம்பெறாது என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜெனீவாவில் முடுக்கிவிடப்பட்டுள்ள சிறிலங்காவின் இராஜதந்திர நகர்வுகள்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30 ஆவது அமர்வு எதிர்வரும் 14ஆம் நாள் ஆரம்பமாகவுள்ள நிலையில், ஜெனீவாவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் இராஜதந்திரச் செயற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

விசாரணையைத் தவிர்க்க அமெரிக்காவுக்கு தப்பிச் சென்றாரா சுசில் பிரேமஜெயந்த?

மகிந்த ராஜபக்ச ஆட்சியின் போது, இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து விசாரிக்கும், நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினால் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட, முன்னாள் அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த திடீரென அமெரிக்காவுக்குச் சென்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.நா பொதுச்சபையில் சிங்களமொழியில் உரையாற்றுவார் சிறிலங்கா அதிபர்

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சிங்களத்தில் உரையாற்றக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.நா பொதுச்சபையில் வரும் செப்ரெம்பர் 30 ஆம் நாள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உரையாற்றவுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி சம்பந்தனுக்கே வழங்கப்பட வேண்டும் – கூட்டமைப்பு கோரிக்கை

சிறிலங்கா நாடாளுமன்ற சம்பிரதாயத்தின் படி இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தனுக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது.

மத்தல விமான நிலையத்தில் நெல்லைக் களஞ்சியப்படுத்த அனுமதி

அம்பாந்தோட்டையில் முன்னைய அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட மத்தல மகிந்த ராஜபக்ச விமான நிலையத்தில், யால போகத்தில் அறுவடை செய்யப்படும் நெல்லை களஞ்சியப்படுத்த, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

4 இராணுவ அதிகாரிகளை தடுத்து வைத்து விசாரிக்க சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அனுமதி

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்ட நான்கு இராணுவ அதிகாரிகளையும், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரிக்க, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு நேற்று அனுமதி அளித்துள்ளது.