மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

நீதித்துறை அதிகாரிகள் – ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் சந்திப்புக்கு தடை

சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள சுதந்திரமாக ஒன்று கூடுவதற்கான உரிமைகள் தொடர்பான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் கிளெமென்ற் நயாலெட்சோசி வூல் உடன், தலைமை நீதியரசர் உள்ளிட்ட நீதித்துறை அதிகாரிகள் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை நிறுத்துமாறு சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவுறுத்தியுள்ளார்.

கொழும்புடன் இணைந்தது துறைமுக நகர நிலப்பரப்பு

கடலுக்குள் புதிதாக உருவாக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகர நிலப்பரப்பை, கொழும்பு பிரதேச செயலர் பிரிவுடன் இணைப்பதற்கான, தீர்மானம் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

பேராயர் மல்கம் ரஞ்சித்துக்கு சிறிலங்கா அதிபர் பதிலடி

சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் முன்வைத்த குற்றச்சாட்டுகளை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார்.

அமைச்சர் பதவிகளை ஏற்பதில்லை – முஸ்லிம் காங்கிரஸ் முடிவு

சிறிலங்கா அரசாங்கத்தில் மீண்டும் அமைச்சர் பதவிகளை இப்போது பொறுப்பேற்றுக் கொள்வதில்லை என, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

சம்பந்தனை அழைக்கவில்லை – ஒப்புக்கொண்டார் மனோ கணேசன்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் ஒழுங்கு செய்திருந்த சந்திப்புக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு தாம் அழைப்பு விடுக்கவில்லை என்று, அமைச்சர் மனோ கணேசன் ஒப்புக் கொண்டுள்ளார்.

ரியூனியன் தீவை நோக்கி சிறிலங்கா குடியேற்றவாசிகளின் மற்றொரு படகு?

சிறிலங்காவில் இருந்து சட்டவிரோத குடியேற்றவாசிகள் என சந்தேகிக்கப்படுபவர்களை ஏற்றிக் கொண்டு படகு ஒன்று வந்து கொண்டிருப்பதாக ரியூனியன் தீவு எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

வாக்குறுதியை மறந்த ரணில் – கூட்டமைப்புடனான உறவில் விரிசல்

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் விவகாரத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அளித்த வாக்குறுதியை சிறிலங்கா பிரதமர் காப்பாற்றத் தவறியுள்ள நிலையில், கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான உறவுகளில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

‘நாம் கூட்டமைப்புக்கு எதிரான அணி அல்ல’ – விக்கி

தமது கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான அணி அல்ல என்று, தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும், வடக்கின் முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கான உதவிகளை அதிகரிப்பதாக உலக வங்கி உறுதி

சிறிலங்காவின் வரவுசெலவுத் திட்ட இடைவெளியைக் குறைப்பதற்கு உலக வங்கி தொடர்ந்தும் நிதியுதவிகளை வழங்கும் என்று, உலக வங்கியின்  தெற்காசியப் பிராந்தியத்துக்கான உதவித் தலைவர் ஹாட்விக் ஸ்காபர் உறுதி அளித்துள்ளார்.

அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலருடன் சிறிலங்கா தூதுவர் சந்திப்பு

அமெரிக்காவுக்கான சிறிலங்காவின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள றொட்னி பெரேராவை, அமெரிக்க இராஜாங்கத் திணைக்கத்தின் தெற்கு மத்திய ஆசிய பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலர் அலிஸ் வெல்ஸ் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.