மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

மீண்டும் போட்டியிடுவதா என்று முடிவு செய்யவில்லை – சிறிலங்கா அதிபர்

வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடுமாறு பலர் தன்னிடம் கோரிக்கை விடுத்துள்ள போதிலும், போட்டியிடுவதா இல்லையா என்று தாம் இன்னமும் முடிவு செய்யவில்லை என, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

டெனீஸ்வரனை நீக்கியது தவறு – விக்னேஸ்வரனுக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு

வடக்கு மாகாண முதலமைச்சராக இருந்த சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாண அமைச்சராக இருந்த  டெனீஸ்வரனை, அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியது தவறு என, மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அமெரிக்கவின் பயண எச்சரிக்கை – தவறாக பரப்புரை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்ட பயண எச்சரிக்கையை தவறாகப் புரிந்து கொண்டு, சில ஊடக நிறுவனங்களும், தனிநபர்களும் மற்றொரு பயங்கரவாதத் தாக்குதல் குறித்து பொய்யான பரப்புரைகளை மேற்கொண்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கத்தின் தேசிய ஊடக மையம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க எச்சரிக்கையை அடுத்து பாதுகாப்பு அதிகரிப்பு

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, இந்த மாதம் அடுத்தடுத்து நிகழும் மத மற்றும் கலாசார விழாக்களில் ஆயிரக்கணக்கான சிறிலங்கா படையினரும், காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

சிறிலங்கா அதிபர் தேர்தலில் மோதப் போகும் ரணில்- கோத்தா?

இந்த ஆண்டு பிற்பகுதியில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணியின் சார்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், பொதுஜன பெரமுனவின் தலைமையிலான கூட்டணியின் சார்பில் கோத்தாபய ராஜபக்சவுமே போட்டியிடவுள்ளனர் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு மாத கால கட்டணமில்லா நுழைவிசைவு

48 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு,கட்டணமில்லா வருகை நுழைவிசைவு வழங்கும் திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் தொடக்கம், இந்த திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

தீவிரவாதத்தை எதிர்கொள்வதற்கு உதவ ஐரோப்பிய ஒன்றியம் தயார்

வன்முறை தீவிரவாதத்தை எதிர்கொள்வதற்கு, சிறிலங்கா அரசாங்கத்துக்கு உதவத் தயாராக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஐதேக செயற்குழு கூட்டத்தில் குழப்பம் – கூட்டணியை உருவாக்குவதில் சர்ச்சை

வரும் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு பரந்துபட்ட கூட்டணியை உருவாக்குவதற்கான அனுமதியை வழங்கும் நோக்கில் நேற்று கூட்டப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

கோத்தாவுக்கு மே 7இல் வழங்கப்பட்ட புதிய கடவுச்சீட்டு  

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு கடந்த மே 7 ஆம் நாள் புதிய கடவுச்சீட்டு வழங்கப்பட்டதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஆர்.எம். பி.எஸ். பி. ரத்நாயக்க தெரிவித்தார்.

பலாலியில் இருந்து தென்னிந்தியாவுக்கு செப்ரெம்பரில் முதல் விமான சேவை

பலாலி விமான நிலையத்தில் இருந்து, இந்திய துணைக் கண்டத்துக்கான பிராந்திய விமான சேவைகளை வரும் செப்ரெம்பர் மாதம் ஆரம்பிக்கவுள்ளதாக சிறிலங்காவின் சிவில் விமானப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.