மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

நாளை பரப்புரையைத் தொடங்குகிறார் சஜித்

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் அதிபர் வேட்பாளர் தொடர்பான இழுபறிகள் நீடிக்கின்ற நிலையில், அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியின் பிரதித் தலைவரான சஜித் பிரேமதாச நாளை பரப்புரைகளை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வேட்பாளரை அறிவித்த பின்னரே கூட்டணி – சஜித் அழுங்குப்பிடி

அதிபர் வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்பட்ட பின்னரே, புதிய கூட்டணியை அமைக்க வேண்டும் என ஐதேகவின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கோத்தாவை வேட்பாளராக அறிவிக்கிறார் மகிந்த – ஒரு வாரம் ஆலயங்களில் வழிபாடு

வரும் அதிபர் தேர்தலுக்கான பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக கோத்தபய ராஜபக்சவை, எதிர்வரும் 11ஆம் நாள், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச அறிவிக்கவுள்ளார் என, ராஜபக்சவினருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

30 ஆங்கில ஆசிரியர்களை சிறிலங்காவுக்கு அனுப்புகிறது அமெரிக்கா

அமெரிக்க அரசாங்கம் அடுத்த ஆண்டு 30 ஆங்கில தொண்டர் ஆசிரியர்களை சிறிலங்காவுக்கு அனுப்பவுள்ளதாக சிறிலங்காவின் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கொழும்பு வருகிறார் அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்கச் செயலர் 

தெற்கு, மத்திய ஆசியப் பிராந்திய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்கச் செயலர் அலிஸ் வெல்ஸ் அடுத்த வாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

மீண்டும் பிளவுபடும் சுதந்திரக் கட்சி – மகிந்த பக்கம் பாய்கிறது மற்றொரு அணி

பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படவுள்ள, அந்தக் கட்சியின் மாநாட்டில் தாம் கலந்து கொள்ளப் போவதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

இன்று கம்போடியா செல்கிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நான்கு நாட்கள் பயணமாக இன்று கம்போடியாவுக்குச் செல்லவுள்ளார். அவர்  இன்று நொம்பென்னை வந்தடைவார் என, கம்போடிய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

கோத்தாவை சந்திக்கும் ஐதேக அமைச்சர்கள் – அம்பலமாகும் இரகசியங்கள்

கோத்தாபய ராஜபக்சவுடன் தாம் இரகசிய சந்திப்பை நடத்தவில்லை என சிறிலங்காவின் துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எனினும், கோத்தாபய ராஜபக்சவை அவரது இல்லத்துக்குச் சென்று சந்தித்ததாகவும், அது பகல் வெளிச்சத்தில் வெளிப்படையாக நடந்த சந்திப்பே அது என்றும் அவர் கூறியுள்ளார்.

சஜித் அணியினரின் புது அழுத்தம் – ஐதேகவுக்கு மற்றொரு நெருக்கடி

வரும் அதிபர் தேர்தலில் ஐதேக அமைக்கவுள்ள கூட்டணியில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியையும் உள்ளடக்க வேண்டும் என, ஐதேகவின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் அணியினர்  தற்போது வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கூட்டமைப்புக்கு எதிராக மற்றொரு கூட்டணி – ஆனந்தசங்கரி திட்டம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக புதிய கூட்டணி ஒன்றை அமைப்பது குறித்து, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தனது இல்லத்தில் பல்வேறு கட்சிகளுடன் கலந்துரையாடல்களை, நடத்தியுள்ளார் என ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.