மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

சிறிலங்காவில் சிறப்பு வசதிகளைக் கொண்ட முதல் சிறைச்சாலை

கைதிகளுக்கான சிறப்பு வசதிகளைக் கொண்ட- அனைத்துலக தர நியமங்களுக்கேற்ப கட்டப்பட்ட சிறிலங்காவின் முதல் சிறைச்சாலை நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மகிந்தவின் குற்றங்களை அம்பலப்படுத்தவே அரசியலில் இறங்கினேன் – சரத் பொன்சேகா

தனது பிரதான எதிரியான மகிந்த ராஜபக்சவின் கடந்த காலத் தவறுகளை அம்பலப்படுத்தவதற்காகவே தாம் அரசியலில் நுழைந்து அமைச்சர் பதவியைப் பெற்றதாக, சிறிலங்கா அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

புதிய சட்டத்தினால் பொருத்தமான பெண் வேட்பாளர்களை தேடி அலையும் அரசியல் கட்சிகள்

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்களின் வேட்பாளர் பட்டியலில் 25 வீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், பிரதான அரசியல் கட்சிகள் பெண் வேட்பாளர்களைத் தேடி அலையத் தொடங்கியுள்ளன.

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் வரிப்பொறுப்பு கண்காணிப்பு எல்லைக்குள் கொண்டு வர முடிவு

சிறிலங்காவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் அடுத்த ஆண்டு வரிப் பொறுப்பு கண்காணிப்பு எல்லைக்குள் கொண்டு வரப்படவுள்ளனர். அடுத்த இரண்டு ஆண்டுகளில் வருமான வரியை இரட்டிப்பாக்கும் புதிய திட்டத்துக்கமைய இந்த நடைமுறை கொண்டு வரப்படவுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

335 உள்ளூராட்சி சபைகளுக்கு ஜனவரி 20இல் தேர்தல் நடப்பது உறுதி – தேர்தல் ஆணைக்குழு

எதிர்வரும் 2018 ஜனவரி 20ஆம் நாள், 333 உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல்கள் நடைபெறுவது உறுதி என்று சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொகமட் தெரிவித்துள்ளார்.

வடக்கில் அமைதியைக் குழப்புகிறது கூட்டமைப்பு – சிறிலங்கா அமைச்சர் குற்றச்சாட்டு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கில் அமைதியைக் குழப்பி வருவதாக சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன குற்றம்சாட்டியுள்ளார்.

அமெரிக்க வர்த்தகச் செயலருடன் மங்கள சமரவீர பேச்சு

அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா நிதி அமைச்சர் மங்கள சமரவீர, அமெரிக்காவின் வர்த்தகச் செயலர் வில்பர் ரோசை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

இந்திய- சிறிலங்கா இராணுவங்களின் கூட்டுப் பயிற்சி இன்று ஆரம்பம்

இந்திய- சிறிலங்கா இராணுவத்தினர் இணைந்து மேற்கொள்ளும், மித்ரசக்தி-2017 கூட்டுப் பயிற்சி, இன்று இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேயில் ஆரம்பமாகவுள்ளது.

கூட்டமைப்புக்கு எதிரான தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து போட்டி – பசில் அறிவிப்பு

வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து, கூட்டணி ஒன்றை உருவாக்கவுள்ளதாக, சிறிலங்கா பொதுஜன முன்னணியின் அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இடைக்கால அறிக்கைக்கு அங்கீகாரம் அளிக்கக் கூடாது – சிறிலங்கா அதிபரிடம் கோரிய வீரவன்ச

புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளிக்காமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்துள்ளார்.