கோத்தாவை போட்டியிட முடியாமல் தடுக்கும் முயற்சி தோல்வி – பீரிஸ்
கோத்தாபய ராஜபக்சவை அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாமல் தடுக்கின்ற முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதாக, பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜிஎல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கோத்தாபய ராஜபக்சவை அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாமல் தடுக்கின்ற முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதாக, பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜிஎல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் முன்வைப்பதற்காக 13 கோரிக்கைகளை உள்ளடக்கிய ஆவணத்தை தயாரித்துள்ள ஐந்து தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்திக்க சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
முல்லைத்தீவு- பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய சூழலில், நீதிமன்ற உத்தரவை மீறி பௌத்த பிக்குவின் உடலை தகனம் செய்தாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பொதுபல சேனாவின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரரை மன்றில் முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறிலங்கா அதிபர் தேர்தல் தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு, வரும் 24ஆம் நாள் வெளியிடப்படும் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் பொது ஒழுங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும், பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு, இராஜதந்திர விலக்குரிமை உள்ளது என்றும், அதனை பிரித்தானியா மதித்து நடக்க வேண்டும் என்றும் சிறிலங்கா கோரியுள்ளது.
சிறிலங்கா பொதுஜன முன்னணியுடனும், அதன் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுடனும், புரிந்துணர்வு உடன்பாடுகளைச் செய்து கொண்டுள்ள போதும், அந்தக் கட்சியுடன் இணைந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி பரப்புரைகளை மேற்கொள்வதில்லை என்று முடிவு செய்துள்ளது.
சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் எல்லா வேட்பாளர்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பு அளிக்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார் என, அதிபர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தனிப்பட்ட நலன்களுக்காக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, சிறிலங்கா சுதந்திரக் கட்சியைக் காட்டிக் கொடுத்து விட்டார் என்று கட்சியின் முன்னாள் தலைவியான சந்திரிகா குமாரதுங்க குற்றம்சாட்டியுள்ளார்.
சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும், வேட்பாளர் எம்எல்ஏஎம் ஹிஸ்புல்லா மற்றும், இலங்கை தவ்ஹீத் ஜமாத் பொதுச்செயலாளர் அப்துல் ராசிக்குடன் தனக்கு தொடர்பு இருப்பதாக வெளியான தகவல்களை பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச நிராகரித்துள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் ஊடகப் பிரிவின் கீச்சக கணக்கு, குறித்த சமூக ஊடக நிறுவனத்தினால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.