மேலும்

செய்தியாளர்: சிறப்புச் செய்தியாளர்

12 முஸ்லிம் எம்.பிக்கள் மக்காவுக்குப் பயணம் – அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை நேற்று முன்தினம் மாலை சந்தித்து விட்டு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹஜ் யாத்திரைக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

இன்றிரவு நாடாளுமன்றத்தைக் கலைக்க சிறிலங்கா அதிபர் திட்டம்?

சிறிலங்கா நாடாளுமன்றத்தை இன்றிரவு கலைப்பதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டுள்ளதாக, தகவல்கள் கிடைத்துள்ளன என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

சபாநாயகரைச் சந்தித்தார் அமெரிக்க தூதுவர் – நாடாளுமன்றத்தை கூட்ட வலியுறுத்தினார்

சிறிலங்காவுக்கான புதிய அமெரிக்க தூதுவராக பொறுப்பேற்றுள்ள அலய்னா ரெப்லிட்ஸ், இன்று காலை சபாநாயகர் கரு ஜெயசூரியவைச் சந்தித்து தற்போதைய அரசியல் நெருக்கடிகள் குறித்து விவாதித்துள்ளார்.

சபாநாயகரின் அறிவிப்பால் மகிந்த தரப்பு கடும் அதிர்ச்சி – அச்சுறுத்தலில் இறங்கியது

பெரும்பான்மையை நிரூபிக்காத வரை- மகிந்த ராஜபக்சவை பிரதமராக ஏற்க முடியாது என்று சபாநாயகர் கரு ஜெயசூரிய வெளியிட்ட அறிக்கை, மைத்திரி- மகிந்த அரசாங்கத்துக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், சபாநாயகருக்கு அரசாங்கத்தின் பங்காளிகள், பகிரங்க எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர்.

புதுடெல்லி – மகிந்த இடையில் நம்பிக்கையோ, புரிந்துணர்வோ கிடையாது – பேராசிரியர் முனி

புதுடெல்லிக்கும் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் எந்தவிதமான பரஸ்பர நம்பிக்கையே புரிந்துணர்வோ கிடையாது என்றும், ராஜபக்சவின் மீள் வருகையையிட்டு இந்தியா நிச்சயம் மகிழ்ச்சியடையவில்லை என்றும், இந்தியாவின் முன்னாள் இராஜதந்திரியும், தெற்காசிய விவகாரங்களுக்கான நிபுணருமான பேராசிரியர் எஸ்.டி முனி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் 460 மில்லியன் டொலர் நிதியுதவி சிறிலங்காவுக்கு கிட்டுமா?

சிறிலங்காவின் அரசியல் குழப்பங்களினால், அமெரிக்காவின் பல மில்லியன்  டொலர் நிதியுதவி வழங்கும் திட்ட உடன்பாடு கையெழுத்திடும் நிகழ்வு அடுத்த மாதம் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

வியாழேந்திரனை மகிந்த அணிக்கு கொண்டு செல்ல கனடாவில் நடந்த பேரம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  எஸ்.வியாழேந்திரன், திடீரென மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டதன் பின்னணியில் நடந்த நாடகம் குறித்த சில தகவல்கள் ஆங்கில இதழ் வாரஇதழ் ஒன்றில் வெளியாகியுள்ளன.

அட்மிரல் விஜேகுணரத்ன விவகாரம் – நீதிமன்ற உத்தரவினால் சிறிலங்கா அதிபருக்கு நெருக்கடி

சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு, கோட்டே நீதிவான் ரங்க திசநாயக்க நேற்று உத்தரவிட்டுள்ளார்.

ரணிலைச் சந்தித்தார் கோத்தா

ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கும் இடையில் நேற்றுமாலை சந்திப்பு  இடம்பெற்றிருப்பதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அரசியல் நகர்வுகள் ஆராய கூட்டமைப்பின் உயர்மட்டக் குழு நாளை கூடுகிறது

சிறிலங்காவில் அரசியல் குழப்பங்கள் தீவிரமடைந்துள்ள கட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின், உயர்மட்டக் குழு நாளை அவசரமாக கூடி ஆராயவுள்ளது.