பலாலி விமான நிலையத்தை மதிப்பீடு செய்ய வருகிறது இந்திய தொழில்நுட்ப குழு
பலாலி விமான நிலையத்தின் வசதிகள் தொடர்பான மதிப்பீடுகளைச் செய்வதற்கு, அடுத்த வாரம் இந்தியாவில் இருந்து தொழில்நுட்பக் குழுவொன்று சிறிலங்காவுக்கு வரவுள்ளதாக, கொழும்பிலுள்ள அதிகாரிகளை மேற்கோள்காட்டி ‘தி ஹிந்து’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.


